Subscribe Us

header ads

வரவு – செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு

2014 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 21ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றத்தில்  முன் வைக்கவுள்ளார். 
 
வரவு - செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இம் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி 27 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
 
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இம் மாதம் 29ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.
 
வரவு செலவு திட்டம் மீதான குழு நிலை விவாதம் அடுத்த மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
 
வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 20ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments