(சிலாபம் திண்ணனூரான்)பலர் தமது வீடுகளின் செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கின்றனர். இன்று பல நாய்களின் விலைகள் மூன்று இலட்சம் ரூபாவையும் கடந்துவிட்டன.
புல்டோ பொஞ்சா, வுல்மஸ்டிப், டெல்மேசன், ஜேர்மன் ஜெப்பர்ட், சைப்பீரியன், அஸ்க்கி, லெப்ராடர், டெஸ்ஹன், பீஹிஸ், கொமனேரியன் ஸ்பக், ரொட்வெய்லர், வோல்டன், ரெட்றீலர் என நாய்களின் இனத்தின் பல்வேறு பிரிவு வகைகள் உண்டு. இவ் இனங்களின் பெரும் சாதனைகளையும் வீர தீரச் செயல்களைக் கொண்ட நாய் வகைகளும் உள்ளன. எமது நாட்டிலும் நாய் இனத்திற்கென தனி விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.
மனிதனுக்கு பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவர்கள், நலன்புரிச் சங்கங்கள் உள்ளவை போன்று நாய்களுக் கும் உள்ளன. நாய்களுக்கான விடுதிகள், வார்ட்டுகளில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறும் மருத்துவமனை, விளையாட்டுபயிற்றுவிப்பாளர், Ceylon Kennel Club, Pet Boarding, Kennel Association
of Sri Lanka போன்ற அமைப்புகளும் எமது நாட்டில் நாய்களுக்கென இயங்குகின்றன. மனிதர்களுக்கான அனைத்து சலுகைகளில் 75 வீதமானவை இன்று நாய்களுக்கும் உரிமையாகிவிட்டன.
மனிதனின் மருந்து வகைகளையும் உணவு வகைகளையும் விட நாய்களின் மருந்தும் உணவும் விலைக்கூடியவை மட்டுமல்ல தரமானவையுமாகும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதனைவிட நாய் பெரும் செல்வாக்கோடு வாழ்கின்றது.
காரணம் விஞ்ஞான வளர்ச்சியால் மனி தன் பாதிக்கப்பட்டு விட்டான். முற்றாக அவனது கலை, கலாசாரம், பண்பாடுகள் மாற்றம் பெறுகின்றன. ஆனால் அன்றும், இன்றும் நாய் இனம் மனிதன் இனத்துக்கு விசுவாசமாக, கண்ணியமுள்ள நன்றியுள்ள மிருகமாகவே காணப்படுகின்றது.
மனிதனைவிட பல்வேறு தகை மைகளைக் கொண்ட நாய்களுக்கென கொழும்பு, மட்டக்குளி யின் காக்கைத்தீவு பிரதேசத்தில் மயா னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
எந்த நீதிமன்றத்திலும் விசுவாசப் பிரமாணம் எடுக்காத தங்களின் பொறுப்பு வாய்ந்த நம்பிக்கைக்குரிய செல்லப் பிராணியான நாய்களுக்கு, சில நல்ல உள்ளங்கள் இணைந்து, தங்களின் நாய் தனது வாழ்க்கையின் பயணத்தை முற்றுவிக்கும் ஒரு முற்றுப்புள்ளியான மரணத்தை தழுவியதன் பின்னர் அடக்கம் செய்வதற்காக காக்கைத்தீவின் கடலோரத்தில் இச் சௌந்த ரிய மயானத்தை அமைத்துள்ளனர்.
காக்கைத்தீவு கடற்கரைத் திடலில் கடல் அலைகளோடு சனி, ஞாயிறு தினங்களில் மக்கள் கூட்டமும் அலைமோதும். இம் மக்கள் கூட்டத்தின் பார்வையில் செல்லப் பிராணியான நாய்களின் மயானம் விழுந்ததும் வியப்போடு தங்க ளின் மூக்கில் விரலை வைத்து அதிசயமாக மயானத்தை பார்வையிடுவர்.
காக்கைத்தீவைச் சுற்றி பெரும் வீடமைப் புத் திட்டம் உள்ளது. இவ் வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்கள் இணைந்து காக்கைத்தீவு சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக 2006 ஆம் ஆண்டில் காக்கைத்தீவு கடற்கரை பூங்கா சங்கம் என்றப் பெயரில் ஒரு அமைப்பை அமைத்தனர்.
இவ் வீடமைப்புத் திட்டத்தில் குடியிருப்பாளராக வசிக்கும் பொருளாதார
அபிவிருத்தி அமைச் சின் மேலதிக செயலாளரான சாந்த பண்டாரவே இவ் அமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தார். இச் சங்கத்தில் மூவின மக்களும் அங்கத்தவர்களாக உள்ளனர்.
இன்று இச் சங்கம் காக்கைத்தீவில் பல பாரிய வேலைத் திட்டங்களை முன்னெ டுத்து வருகின்றது. விடுமுறை நாட்களில் காக்கைத்தீவு கடற்கரை பிரதேசம் சுற்றுலா மையத்தைப் போன்று மக்களால் நிறைந்து காணப்படும்.
இந்நிலையிலேயே 2010 ஆம் ஆண்டில் காக்கைத்தீவின் கடற்கரை பூமியில் நாய்களுக்கான மயானம் நிர்மாணிக்கப்பட்டது. இம் மயானத்துக்கென தனியானதோர் இணையத்தளமும் ஆரம்பிக்கப்பட்டது. பல நாடுகளிலிருந்து இம் மயானத்தின் சிறப்பை உணர்ந்த பலர் இணையத்தளத் தின் வாயிலாக அறிந்து உதவ முன்வந்தனர்.
இருந்தும் காக்கைத்தீவு கடற்கரை பூங்கா சங்கம் அவ் உதவிகளை பெற்றுக் கொள்ள இணக்கம் தெரிவிக்கவில்லை. சங்கத்தின் மூலமாகவே இப்பூங்காவினதும் மயானத்தையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டுச் செல்ல செயல்படுகின்றனர்.
இச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெட் ரம் மாஸ், நாய்களுக்கான மயானத்தை உயர் நிலைக்கு இழுத்துச் செல்வதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின் றார். தனது நிதியில் இம் மயானத்தில் செல்ல நாய் உருவ சிலையுடன் இணைந்த நினைவுத் தூபி ஒன்றை நிர்மாணித்துள்ளார்.
சிறந்த கலை அம்சத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத் தூபியின் Pets Rest 2010 என ஆங்கிலத்தில் தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இம் மயானத்தின் சிறப்பம்சமே இந்நினைவுத் தூபிதான்.
உலகத்தில் நன்றி மறக்கும் மனிதர்கள், வளர்த்தவனையே தூற்றுவார்கள் என்ப தால் வாயைக் கட்டி நாயைப் படைத்தாயா இறைவா? என இச்சிலை உருவான நாயைப் பார்த்ததும் மனதில் எண்ணத் தோன்றும். இதுவரை இம் மயானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்ல நாய்களின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இம்மயானத்தில் அடக்கம் செய்யப்படும் நாய்களுக்கு இறுதியான சமயச் சடங்குகளும் கிரியைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சிலர் தங்களின் பாசமான பிராணியின் நினைவு தினத்தன்று இப்பூங்காவில் காணப்படும் நாய்களுக்கு நினைவு தினத்தன்று இப்பூங்காவில் காணப்படும் நாய்களுக்கு விசேடமாக உணவு தயாரித்து உன்னதான நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. இந்நிகழ்வில் நாய்கள் மாத்திரமே கலந்து கொள்ளும்.
இம் மயானத்தில் நாய்களின் பிரேதம் அடக்கம் செய்ய வருகையில் பலர் துயரம் தாளாமல் அழுது புலம்பிக் கொண்டு வருவதையும் காணலாம். வயது வித்தியாசம் இல்லாது பெரும் சத்தத்தோடு அழுது புலம்புவதை காண்போரையும் துயரம் மிரட்டும். இதற்கு முக்கிய காரணம் மனிதனால் பேசவும் சிரிக்கவும் இயலும். செல்லப் பிராணியான நாயால் பேசவும் முடியாது சிரிக்கவும் இயலாது.
எல்லாவற்றிற்கும் மேலாக நன்றியுள்ள நாய் தன் எஜமானின் குடும்பத்தின் மீது வைத்திருந்த விலைமதிப்பற்ற பாசமேயாகும். ராஜகிரியவில் முப்பது
வருடங்களாக வசிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணியொருவர், அண்மையில் தனது செல்ல நாய் மரணத்தை எட்டியதன் பின்னர் இணையத்தளத்தினூடாக காக்கைத்தீவு மயானம் பற்றி அறிந்து, இம் மயானத்தில் அடக்கம செய்துள்ளார்.
அடக்கம் செய்யும் முன்னரும் பின்னரும் சமய வழிபாடுகளையும் இவரின் குடும்பம் மயானத்தில் நடத்தியுள்ளது. இறுதியில் மயானத்தை விட்டு வெளியேறுகையில், முழுக் குடும்பமும் தேம்பி, தேம்பி அழுதுள்ளனர். பின்னர் அங்கு கூடி நின்றோர் சமாதானம் கூறி அனுப்பி வைத்துள்ளனர். பாருங்கள்... மனிதர்ளையும் நாய்கள் அழ வைக்கின்றன.
இவ்வாறு பல்வேறு புதுமைகளை உள்வாங்கிய நிலையில் இம்மயானம்
காணப்படுகின்றது. காக்கைத் தீவு கடற்கரை பூங்கா சங்கத்தின் தலைவராக வர்த்தகர் வசந்த முனவீரவும் செயலாளராக முன்னாள் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமல் பெரேராவும் பொருளாளராக வருமானவரி ஆலோசகர் ஆர். நாகேஷ்வரனும் செயலாற்றுகின்றனர்.
எதிர்காலத்தில் மக்களின் தேவைக்கேற்ப இம் மயானம் விஸ்தரிக்கப்படுவதுடன் கடற்கரை பிரதேசம்பெரியோர்களும் சிறுவர்களும் பொழுதை கழிப்பதற்கேற்ற வகையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இச்சங்கம் தெரிவிக் கின்றது.
மரணம் என்பது மன வலிமைக்கான மன்னிப்புக் குரல் அல்ல. மயானத்தை அழைக்கும் மர்மக்குரல். செல்லப் பிராணிகளான நாய், பூனை மரணத்தை எட்டியதும் மரியாதையோடு அப்பிராணிகளின் n அடக்கம் செய்ய அழகிய பூங்காவுடன் கூடிய மயானம் அமைத்து சுற்றி மதில் எழுப்பி, அழகுபார்க்கும் காக்கைத்தீவு கடற்கரைப் பூங்கா சங்கத்தினரை பலரும் பாராட்டுகின்றனர்.
(சிலாபம் திண்ணனூரான்)
பலர் தமது வீடுகளின் செல்லப் பிராணியாக நாய்களை வளர்க்கின்றனர். இன்று பல நாய்களின் விலைகள் மூன்று இலட்சம் ரூபாவையும் கடந்துவிட்டன.
புல்டோ பொஞ்சா, வுல்மஸ்டிப், டெல்மேசன், ஜேர்மன் ஜெப்பர்ட், சைப்பீரியன், அஸ்க்கி, லெப்ராடர், டெஸ்ஹன், பீஹிஸ், கொமனேரியன் ஸ்பக், ரொட்வெய்லர், வோல்டன், ரெட்றீலர் என நாய்களின் இனத்தின் பல்வேறு பிரிவு வகைகள் உண்டு. இவ் இனங்களின் பெரும் சாதனைகளையும் வீர தீரச் செயல்களைக் கொண்ட நாய் வகைகளும் உள்ளன. எமது நாட்டிலும் நாய் இனத்திற்கென தனி விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.
மனிதனுக்கு பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவர்கள், நலன்புரிச் சங்கங்கள் உள்ளவை போன்று நாய்களுக் கும் உள்ளன. நாய்களுக்கான விடுதிகள், வார்ட்டுகளில் தங்கி மருத்துவ சிகிச்சை பெறும் மருத்துவமனை, விளையாட்டு பயிற்றுவிப்பாளர், Ceylon Kennel Club, Pet Boarding, Kennel Association of Sri Lanka போன்ற அமைப்புகளும் எமது நாட்டில் நாய்களுக்கென இயங்குகின்றன. மனிதர்களுக்கான அனைத்து சலுகைகளில் 75 வீதமானவை இன்று நாய்களுக்கும் உரிமையாகிவிட்டன.
மனிதனின் மருந்து வகைகளையும் உணவு வகைகளையும் விட நாய்களின் மருந்தும் உணவும் விலைக்கூடியவை மட்டுமல்ல தரமானவையுமாகும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதனைவிட நாய் பெரும் செல்வாக்கோடு வாழ்கின்றது.
காரணம் விஞ்ஞான வளர்ச்சியால் மனி தன் பாதிக்கப்பட்டு விட்டான். முற்றாக அவனது கலை, கலாசாரம், பண்பாடுகள் மாற்றம் பெறுகின்றன. ஆனால் அன்றும், இன்றும் நாய் இனம் மனிதன் இனத்துக்கு விசுவாசமாக, கண்ணியமுள்ள நன்றியுள்ள மிருகமாகவே காணப்படுகின்றது.
மனிதனைவிட பல்வேறு தகை மைகளைக் கொண்ட நாய்களுக்கென கொழும்பு, மட்டக்குளி யின் காக்கைத்தீவு பிரதேசத்தில் மயா னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- See more at: http://www.metronews.lk/feature.php?feature=38&display=0#sthash.2G1k1wxh.dpuf

0 Comments