சிசுவான் மாகாணத்தில் பிக்ஸியன் நகரில் உயிரிழந்த மேற்படி பெண் நாயின்
உடலை விட்டு அகல மறுத்து இரு நாட்களாக அந்த நாய்க்குட்டி காவல்
இருந்துள்ளது.
அந்த வழியாக சென்ற கார்கள் நாயின் சடலத்தின் மீது மீளவும் மோதாமல் தடுக்கும் முகமாக, நாய்க்குட்டி அந்தக் கார்களை நோக்கி குரைத்து அவற்றை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
அந்த வழியாக சென்ற கார்கள் நாயின் சடலத்தின் மீது மீளவும் மோதாமல் தடுக்கும் முகமாக, நாய்க்குட்டி அந்தக் கார்களை நோக்கி குரைத்து அவற்றை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

இந்நிலையில் பிரதேசவாசிகள் பெரும் போராட்டத்தின் மத்தியில்
நாய்க்குட்டியை அங்கிருந்து வெளியேற்றி இறந்த நாயை மண்ணால் மூடினர்.
இதனையடுத்து அந்த நாய்க்குட்டி உள்ளூர் மிருக பாதுகாப்பு
நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பராமரிப்பின் கீழ் வாழ்வதற்கு
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 Comments