(M.H. Aathif Ahmed)
வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.
தாஹிர் அவர்களின் முயற்சியினால் புத்தளம் மாவட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு
விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி
ஜெயசேகரவுடன் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் முதலமைச்சு
காரியாலயத்தில் தொண்டர் ஆசிரியர்களின் நிலவரம் தொடர்பில் இன்று
கலந்துரையாடினார்.
இதன் போதே தமிழ் மொழி மூல தொண்டர்
ஆசியரியர்களுக்கு விரைவில் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில்
உறுதியளித்ததாக மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலின் போது புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த தழிழ் மொழி மூல தொண்டர் ஆசிரியர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
0 Comments