Subscribe Us

header ads

200 டெஸ்ட் போட்­டி­களில் ஒரே­யொரு தடவை மாத்­தி­ரமே ஸ்டம்ப்ட் முறையில் சச்சின் ஆட்­ட­மி­ழந்­துள்ளார்.... சச்சின் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

இந்­திய கிரிக்கெட் ஜாம்­ப­வா­னான சச்சின் டெண்­டுல்கர் தனது  200 ஆவது
அறி­மு­க­மானார்.

 சச்சின் டெண்­டுல்கர் குறித்து அதிகம் அறி­யப்­ப­டாத சில தக­வல்கள் இங்கே:
 
போட்­டி­யுடன் கண்ணீருடன் சர்வதேச அரங்கிலிருந்து விடைபெற்றார். சச்சின் சரி­யாக 24 வரு­டங்­க­ளுக்­கு முன் 1989 நவம்பர் 15 ஆம் திக­தி டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கு
*பிர­பல இசை­ய­மைப்­பாளர் சச்சின் தேவ் பர்­மனின் நினை­வா­கத்தான் சச்­சி­னுக்கு அவரின் பெற்றோர் சச்சின் என பெயர்­சூட்­டினர்.
 
*தனது பாட­சாலைக் காலத்தில் தலை­ம­யிரை நீள­மாக வளர்த்து தலையைச் சுற்றி “பான்ட்” போட்­டி­ருப்பார்.  டென்னிஸ் வீரர் ஜோன் மெக்­கென்­ரோவைப் பார்த்து சச்சின் பின்­பற்­றிய ஸ்டைல் அது.
 
*சச்­சி­னுக்கு முதன்­மு­தலில் சர்­வ­தேச தரம் வாய்ந்த கிரிக்கெட் பாத­ணி­களை வாங்கிக் கொடுத்­தவர் இந்­திய அணியின் முன்னாள் வீர­ரான பிரவீன் ஆம்ரே.
 
*சச்சின் 14 வயது சிறு­வ­னாக இருக்­கும்­போது அவ­ருக்கு பாரம் குறைந்த கிரிக்கெட் கால் கவ­சங்­களை சுனில் கவாஸ்கர் வழங்­கினார்.  இந்­தூரில் நடை­பெற்ற 15 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான பயிற்சி முகா­மொன்­றின்­போது அந்தக் கவ­சங்கள் திரு­டப்­பட்­டு­விட்­டன.

*15 வய­துக்­குட்­பட்ட மும்பை அணிக்கு சச்சின் தெரி­வா­ன­போது இந்­திய அணியின் முன்னாள் வீரர் திலிப் வெங்­சார்கர் “கன் அன்ட் டூர்” துடுப்­பொன்றை அன்­ப­ளிப்புச் செய்தார்.
 
*1987 ஆம் ஆண்டு உல­கக்­கிண்ணத் தொடரில் இந்திய இங்­கி­லாந்து
அணி­க­ளுக்­கி­டை­யி­லான அரை­யி­றுதிப்  போட்­டி­யின்­போது பந்­து­பொ­றுக்கும்
சிறு­வ­னாக பணி­யாற்­றினார் சச்சின்.
 
*சச்சின் டெண்­டுல்கர் ஆரம்­பத்தில் வேகப்­பந்­து­வீச்­சா­ள­ரா­கவே விரும்­பினார்.
சென்­னை­யி­லுள்ள எம்.ஆர்.எவ். அக்­க­ட­மியில் வேகப்­பந்­து­வீச்சுப் பயிற்­று­ந­ரான அவுஸ்­தி­ரே­லிய ஜாம்­பவான் டென்னிஸ் லில்லி சச்­சினை பந்­து­வீச்­சா­ள­ராக ஏற்­றுக்­கொள்ள மறுத்து நிரா­க­ரித்தார்.
 
*இன்­றைய தினத்தை நவம்பர் 15 ஆம் திக­தியை சச்சின் டெண்­டுல்கர் மறக்­கவே மாட்டார். ஏனெனில் 1989 நவம்பர் 15 ஆம் திகதி கராச்­சியில் நடை­பெற்ற பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டி­யில்தான் சச்சின் டெஸ்ட் கிரிக்­கெட்­டுக்கு அறி­மு­க­மானார். பாகிஸ்­தானின் வக்கார் யூனிஸுக்கும் அதுவே முதல் டெஸ்ட் போட்டி.
 
*சச்­சினின் முத­லா­வது டெஸ்ட் போட்டி அப்­போ­தைய இந்­திய அணித்­த­லைவர் கபில்­தேவின் 100 ஆவது டெஸ்ட் போட்­டி­யா­கவும் அமைந்­தது.
 
*அதி­ரடி துடுப்­பாட்­டத்­துக்குப் பெயர் பெற்ற சச்சின் ஒருநாள் சர்­வ­தேச
கிரிக்­கெட்டில் தனது முதல் சதத்தை 79 ஆவது போட்­டி­யில்தான் பெற்றார்.
 
*1990 இல் இங்­கி­லாந்து சுற்­று­லா­வின்பின் தாயகம் திரும்­பி­ய­போது மும்பை விமான நிலை­யத்­தில்தான் அஞ்­ச­லியை முதன்­மு­த­லாக சச்சின் சந்­தித்தார். பின்னர் அஞ்­சலி அவரின் மனை­வி­யானார்.

*சச்­சினின் மாமனார், (அஞ்­ச­லியின் தந்தை) 7 தடவை இந்­திய தேசிய சம்­பியன் பட்டம் பெற்ற பிரிட்ஜ் விளை­யாட்டு வீரர்.
 
*1992 இல் இங்­கி­லாந்தின் யோர்­க்ஷயர் பிராந்­திய அணியில் இடம்­பெற்ற முத­லா­வது வெளி­நாட்டு வீர­ரானார் சச்சின்.
 
*1997 இல் லோர்ட்ஸ் மைதா­னத்தில் நடை­பெற்ற டெஸ்ட் போட்­டியின் முடிவில் சச்­சி­னிடம் கையெ­ழுத்து வாங்­கு­வ­தற்­காக காத்­தி­ருந்­த­வர்­களில் ஒருவர் ஹரி­பொட்டர் புகழ் நடி­க­ரான டேனியல் ரட்­கிளிவ்.

*தனது அணி­யினர் பயணம் செய்யும் பஸ்­களில் எப்­போதும் இட­து­புறம் ஜன்­ன­லோர ஆச­னத்தை தான் சச்சின் நாடுவார்.
 
®விமானம் செலுத்தும் பின்­னணி எதுவும் இல்­லாமல் இந்­திய விமா­னப்­ப­டையின் கௌரவ குரூப் கப்டன் அந்­தஸ்தை பெற்ற முதல் நபர் சச்சின்.
 
*இந்­தி­யாவின் உள்ளூர் ரஞ்சிக் கிண்ணம், இராணிக் கிண்ணம், துலிப் கிண்ணம் ஆகிய போட்­டி­களில் தனது அறி­முகப் போட்­டி­யி­லேயே சதம் குவித்த ஒரே வீரர் சச்சின்.
 
*ஒருநாள் சர்­வ­தேச போட்­டி­களில் தனது சகாக்கள் மற்றும் எதி­ர­ணி­களைச் சேர்ந்த 866 பேருடன் சச்சின் விளை­யா­டி­யுள்ளார். இதுவும் ஒரு சாத­னைதான்.
 
*டெஸ்ட் போட்­டி­களில் அதிக தடவை (14) ஆட்­ட­நா­யகன் விருது பெற்ற இந்­திய வீரர் சச்சின்.
 
*டெஸ்ட் கிரிக்­கெட்டில் 2012 பௌண்­ட­ரிகள், 69 சிக்­ஸர்­களை சச்சின் விளாசியுள்ளார்.

*200 டெஸ்ட் போட்­டி­களில் ஒரே­யொரு தடவை மாத்­தி­ரமே ஸ்டம்ப்ட் முறையில் சச்சின் ஆட்­ட­மி­ழந்­துள்ளார். அது  2002 ஆம்­ஆண்டு பெங்­களூரில் நடை­பெற்ற இங்­கி­லாந்து அணியுடனான போட்டியின் போதாகும்.
 
*டெஸ்ட் போட்டிகளில் ஒரு தடவை மாத்திரமே ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சச்சின் களமிறங்கியுள்ளார்.

*அவர் ஒருபோதும் 3 ஆவது வரிசை வீராக களமிறங்கியதில்லை.

*4ஆவது வரிசை வீரராக 273 தடவை களமிறங்கினார். 5 ஆவது வரிசையில் 29 தடவைகளும் 6 ஆவது வரிசையில் 20 தடவைகளும் 7 ஆவது வரிசையில 4 தடவைகளும் களமிறங்கியுள்ளார்.- 
      

Post a Comment

0 Comments