(தொகுப்பு- Bazeer M Arshath Kalpitiya.)
தொடர்ச்சி....
இருப்பினும் மர்ஹூம் M.M. மதார் மரைக்கார் அவர்கள் தனது முயற்சியிலிருந்து பின்வாங்காமல் அப்போது கொழும்பில் பரிஸ்ட்டராக கடமையாற்றிக்கொண்டிருந்த மர்ஹூம் M.H.M. நெய்னா மரைக்கார் (முன்னைய நாள் புத்தளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், நிதி திட்டமிடல் அமைச்சர்) அவர்களின் மூலமாக மர்ஹூம் T.B.ஜாயா அவர்களை அணுகி அவரின் மூலமாக கல்வியமைச்சருக்கு முஸ்லிம் பாடசாலையின் அவசியம் பற்றி உருக்கமாக எடுத்து காட்டினார்.

இம்முயற்சிகளின் பலனாக,
01.09.1946 - இரு மொழி பாடசாலையொன்று ஆரம்பிக்க அனுமதி கிடைத்தது
02.09.1946 - கற்பிட்டியில உத்தியோகபூர்வற்ற பாடசாலை ஆரம்பம்.
அதிபர் - மர்ஹூம் S.M.S.அஹ்மத்,
முதல் மாணவர் - K.M.ஹனிபா- முன்னாள் பட்டினசபை தலைவர் (திரு.நௌசாத,திரு.ஆசாத்,திரு.நா சர் ஆகியோரின் தகப்பனார்)
இடம் - செட்டி வீதியிலுள்ள ஹாஜியார் அப்பா குடும்பத்திற்கு சொந்தமான வீடு ( ஒரு வீடு தற்போது ஜனாப், வாஹித் ஆசிரியர் வசிக்கும் வீடு, மற்றையது திரு. அருஸ் ஆசிரியரின் வீடு இருக்கும் இடத்தில் இருந்ததாக அறிய முடிகிறது) இவ்வீடுகளானது மர்ஹூம் M.M. முஹம்மது இஸ்மாயில் மரைக்கார் அவர்களால் 7 வருடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு அதற்கான சாசனம் அப்போதைய DRO வாக இருந்த திரு.சாமுவேல் தம்பையா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
20.09.1946 - கல்வியமைச்சிலிருந்து GS/SF/A கடிதப்படி இருமொழிப்பாடசலை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்தது.
22.11.1946 - உத்தியோகபூர்வமாக கற்பிட்டி கனிஷ்ட பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.ஆரம்ப விழா ஏற்பாடுகள் மர்ஹூம் நெய்னா மரைக்கார் (முன்னைய நாள் நிதி திட்டமிடல் அமைச்சர்) அவர்களால் முன்னின்று செய்யப்பட்டது.
முதல் அதிபர் -திரு.K.S. சுப்ரமணியம்
ஆசிரியர்கள் - திரு. K.கணபதிப்பிள்ளை, திரு. V.தில்லையம்பலம், செல்வி, C.செல்லைய்யா, மௌலவி, K.M.M.ஹனிபா
தமிழ்மொழிப்பிரிவில் 130 மாணவர்களும் இரு மொழிப்பிரிவில் 45 மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இருப்பினும் மாணவர் வரவு குறைவாகவெ காணப்பட்டதால், மரைக்கார்மார் சந்திக்கு சந்தி நின்று பிள்ளைகளை இனிப்புக்கொடுத்து தூக்கிச்சென்று பாடசாலையில் விட்டார்கள் என்பது கொசுறு. அத்தோடு அப்போது மாணவர் வரவு அதிகாரியாக கடமையாற்றிக்கொண்டிருந்த மர்ஹூம் அசன் நெய்னாபிள்ளை அவர்க்ளும் மாணவர் வரவை அதிகரிக்க அதிக முயற்சி எடுத்ததுடன் அடிக்கடி கற்பிட்டிக்கு வந்து பெற்றொருடன் உறையாடி புதிய பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கவும் முயற்சி எடுத்தார்கள்.
தொடரும்......

0 Comments