புத்தளம் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்
புத்தளம் பிரதேசத்தில் போலி நாணத்தாள் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலிருந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணத் தொகுதியில் இந்த போலி நாணயத்தாள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் நீதிமன்றின் நாளாந்த நடவடிக்கைகளின் போது திரட்டப்பட்ட பணம் வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த பணத் தொகுதியில் இரண்டாயிரம் ரூபா போலி நாணத்தாள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அபராதம் அல்லது பிணைப் பணமாக
செலுத்தப்பட்ட தொகையில் இந்த போலி நாணயத்தாள் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என
சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பணத்தை வைப்புச் செய்த நீதிமன்ற காசாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


0 Comments