Subscribe Us

வரலாற்றில் இன்று

1996: ஜே.ஆர்.ஜயவர்தன காலமானார்.

1520: தென் அமெ­ரிக்­காவில் மகலன் நீரிணை மக­லனால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.
 
1592 : கொரியக் கடற்­ப­டை­யினர் பூசான் என்ற இடத்தில் மிகப்­பெரும் ஜப்­பா­னியப் படை­களைத் தோற்­க­டித்­தனர்.
 
1604: ஷேக்ஸ்­பி­யரின் ஓத்­தெல்லோ நாட கம் முதற்­த­ட­வை­யாக லண்­டனில் அரங்­கே­றி­யது.
 
1755: போர்த்­துக்கல், லிஸ்பன் நகரில் இடம்­பெற்ற நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி
கார­ண­மாக 60,000–-90,000 பேர் வரை கொல்­லப்­பட்­டனர்.
 
1805:  ஆஸ்­தி­ரி­யாவை நெப்­போ­லியன் முற்­று­கை­யிட்டான்.
 
1814: நெப்­போ­லி­யனின் பிரெஞ்சு தோல்­வி­ய­டைந்­ததைத் தொடர்ந்து ஐரோப்­பாவின் எல்­லை­களை மீள­வ­ரையும் பொருட்டு வியென்னா காங்­கிரஸ் கூடி­யது.
 
1876: நியூ­ஸி­லாந்தின் மாகாண சபைகள் கலைக்­கப்­பட்­டன.
 
1894: ரஷ்­யாவின் மூன்றாம் அலெக்­சாண்டர் இறந்­ததை அடுத்து இரண்டாம் நிக்­கலாஸ் மன்­ன­னானார்;.
 
1904: இலங்­கையின் வட மாகா­ணத்­துக்­கான ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது அநு­ரா­த­புரம் வரை சேவையில் ஈடு­பட்­டது.
 
1911: இத்­தா­லிக்கும் துருக்­கிக்கும் இடை யில் இடம்­பெற்ற போரில் முதற்­த­ட­வை­யாக விமா­னத்தில் இருந்து குண்­டுகள் வீசப்­பட் ­டன.
 
1914: முதலாம் உலகப் போர்: சிலியில் ஜேர்­ம­னியக் கடற்­ப­டை­யுடன் நடந்த மோத லில்பிரித்­தா­னியக் கடற்­ப­டை­யினர் முதன் முதலில் தோல்­வி­ய­டைந்­தனர்.

1922: ஒட்­டோமான் பேர­ரசின் கடைசி சுல் தான் ஆறாம் மெகமெட் பத­வி­யி­ழந்தார்;.
 
1928: துருக்­கிய மொழி சீர்­தி­ருத்தம் ஏற்­பட்­டது. அரபு எழுத்­துக்கள் புதிய  துருக்­கிய எழுத்­துக்­க­ளாக மாற்­றப்­பட்­டன.
 
1948: சீனாவின் மஞ்­சூ­ரியா என்ற இடத் தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்­கி­யதில் 6,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.
 
1950: புவேர்ட்டோ ரிக்கோ தேசி­ய­வா­தி கள் அமெ­ரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.
 
1951: அமெ­ரிக்­காவின் நெவா­டாவில் அணு­குண்டு வெடிப்புச் சோத­னையில் அமெ­ரிக்கப் படைகள் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.
 
1954: புதுச்­சேரி பிரெஞ்சு ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்று இந்­தி­யா­வுடன் இணைந்­தது.
 
1956: நிசாம் என அழைக்­கப்­பட்ட பகுதி ஆந்­திரப் பிர­தேசம் என்ற மாநி­ல­மாக்­கப்­பட் ­டது.
 
1956: இந்­தி­யாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநி­லங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.
 
1956: இந்­தி­யாவில் கன்­னி­யா­கு­மரி பிர­தேசம் கேரள மாநி­லத்தில் இருந்து
பிரிந்து தமிழ்­நாடு மாநி­லத்­துடன் புதிய மாவட்­ட­மாக இணைந்­தது.
 
1957: அக்­கா­லத்தில் உலகின் மிக நீள­மான தொங்கு பால­மான மக்­கினா பாலம் மிச்­சிகன் மாநி­லத்தில் அமைக்­கப்­பட்­டது.
 
1970: பிரான்ஸில் நடன மாளிகை ஒன்றில் இடம்­பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்­லப்­பட்­டனர்.
 
1973: மைசூர் மாநிலம் கர்­நா­டகா என பெயர் மாற்­றப்­பட்­டது.
 
1981: ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து அன்­டி­குவா பர்­புடா விடு­தலை பெற்­றது.
 
1982: ஜப்­பானின் ஹொண்டா நிறு­வனம் அமெ­ரிக்­காவில் வாகனத் தயா­ரிப்பை ஆரம்­பித்த முத­லா­வது ஆசிய நிறு­வ­ன­மா­கி­யது.
 
1993: ஐரோப்­பிய ஒன்­றியம் அமைப்­ப­தற்­கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
 
1996: இலங்கையின் முதலாவது நிறை வேற்று அதிகாரியான ஜே.ஆர்.ஜயவர்தன காலமானார்.

1998: மனித உரிமைகளுக்கான ஐரோப் பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
 
2006: இந்தியாவின் பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.

Post a Comment

0 Comments