கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் கடந்த 179 வருடங்களாக இயங்கி வந்த மதுபான விற்பனை கவுண்டரை மூடிவிடுவதற்கு ஹோட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பௌத்தர்களின் புனித தலமான கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு அண்மித்த பகுதியில் இது அமைந்துள்ளதன் காரணமாகவும் ஜனாதிபதியின் ‘மதுவுக்கு முற்றுப்புள்ளி’ வேலைத் திட்டத்தின் கீழும் இதனை மூடி விடுவதற்கு ஹோட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹோட்டல் முகாமைத்துவத் தலைவர் சஞ்ஜீவ காடினர் தெரிவித்தார்.
புராதன மரச் சிற்பங்களால் ஆன இந்த ஹோட்டல் 1834ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாக அது நேற்றைய தினம் முதல் மூடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments