Subscribe Us

header ads

பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா அணிகள் தென்னாபிரிக்காவில் இன்று முதல் மோதல்

பாகிஸ்தான் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபது20
 
கிரிக்கெட் சுற்றுப்போட்டி தென்னாபிரக்காவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இவ்விரு அணிகளும்  கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளில் பங்குபற்றிய நிலையில் இன்று முதல் தென்னாபிரிக்காவில் மீண்டும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் தென்னாபிரிக்க சுற்றுலா சுமார் ஒரு மாதகாலத்துக்கு
மட்டுப்படுத்தப்பட்டதால் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தி தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகளுக்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ளது.

இருபது20 போட்டிகள் இரண்டிலும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன.
 
முதலாவது இருபது20 போட்டி ஜொஹான்னர்ஸ் பேர்க் நகரில் இன்று நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி கேப் டவுனில் நடைபெறும்.
 
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கேப் டவுனில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27 ஆம் திகதி போர்ட் எலிஸபெத் நகரிலும் 3 ஆவது போட்டி நவம்பர் 30 ஆம் திகதி சென்சுரியனிலும் நடைபெறவுள்ளன.

Post a Comment

0 Comments