இப்பதிவை ஆரம்பிக்கும் முன்பே,
இவ்விடயத்தில் இன்னும் நான் ஒரு தெளிவான முடிவுக்கு வரவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்...!
எனவே, யாரையும் வெட்டியோ - ஒட்டியோ எழுதும் எண்ணமும் எனக்கில்லை என்பதனை கூறிக்கொள்கிறேன்...
ஒரு நேர்மையான தேடலின் போது, உள்ளத்தில் ஏற்படும் சில வினாக்களையும், சிந்தனைகளையும் மட்டும்...
தெளிவு தேடி ஒரு உயிரோட்டமான மக்கள் கலந்துரையாடலுக்காக இங்கு முன்வைக்கிறேன்...
YouTube சர்ச்சை சார்பாக, நேராகவோ - எதிராகவோ ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்பும் ஒருவர்...
முதலில் செய்யவேண்டிய முக்கிய விடையம், கட்டாயம் youtube உடைய "Terms & Condition" ஐ தெளிவாக வாசித்துவிட்டு வருவதாகும்.
எனக் கருதுகின்றேன்...
இவ்வாக்கத்தை எழுதும் முன், 'எந்த Agreement ஐ ஏற்று நாம் YouTube இல் ஒரு Account ஆரம்பிக்கிறோம்' என்பதை தெளிவாக பார்த்துக்கொள்வதற்காக அதனை வாசித்தேன்...
அதில் கடந்த November 18, 2020 இல் அப்டேட் செய்யப்பட்ட version இப்படிச் சொல்கிறது....
"Ads can now appear on videos from channels not in the YouTube Partner Program (YPP)..." அதாவது,"இப்போது (நவம்பர் 18 2020)முதல் YouTube உடன் partnership செய்யாத அணைத்து channel களிலும்கூட விளம்பரங்கள் காண்பிக்கப்படும்." என்பதாகும்.
இதில் உடன்படாத ஒருவர் YouTube channel ஒன்றை ஆரம்பிக்க முடியாது...!
இன்னொரு வகையில் சொல்வதானால் இன்று YoutTube இல் account வைத்திருக்கின்ற அனைவரும் 'எனது channel ஊடாக நீங்கள் விளம்பரம் செய்யுங்கள்' என்ற ஒப்பந்தத்திலேயே இருக்கின்றோம்...!!
எனவே, YouTube இல் business செய்கின்றவர் - செய்யாதவர் என்ற வேறுபாடின்றி ஒரு Account வைத்திருக்கின்ற அனைவரும் இந்த விளம்பர விடயத்தில் சரி சமமாக சம்பந்தப்படுகிறோம்...!
எனவே எனக்குள் எழும் கேள்வி...
01. விளம்பரம் காரணமாக YouTube ஹராம் என்கின்ற இந்த விவகாரம் அப்படித்தானாக இருந்தால்,
- அதற்க்கு உடன்பட்டு Agreement செய்து youtube account வைத்திருக்கும் அனைவரும் ஹராத்திற்கு துணைபோகிறோம் என்று ஆகாதா..?
- உழைப்போர் மட்டுமன்றி, சாதாரணமாக YouTube இல் விடீயோக்களை upload செய்யும் ஒவ்வொருவரும் அவர்களின் வீடியோ மீது ஓடும் விளம்பரம் காரணமாக பாவம் செய்வதாக ஆகாதா..?
- தஃவா நோக்கில், நன்மைகளை ஏவும் நோக்கில் youtube இல் பகிரப்படும் குறித்த கருத்தை முன்வைக்கும் மதிப்பிற்குரிய உலமாக்கள் உற்பட வீடியோ பகிரும் அனைவருமே பாவம் செய்வதாய் ஆகாதா...?
இவ்வாக்கத்தை எழுதும் முன் இது பற்றிய அறிவுக்காக ஒரு சில YouTube வீடியோ add களை முழுமையாக பார்த்தேன்... (பொதுவாக இவற்றை skip செய்வதே எனது வழக்கம்.) எனது உள்ளூர் மற்றும் வெளியூர் நண்பர்கள் சிலரிடமும் ஒருமுறை பார்க்குமாறு கூறி...
பின்னர் சில feedback களை எடுத்துக்கொண்டேன்...
- அந்த YouTube add கள் பெரும்பாலும் எமது TV விளம்பரங்களை ஒத்திருந்தன.
- அதில் தோன்றிய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிந்திருந்த ஆடைகளும் TV விளம்பரங்கள் அல்லது நாம் வீதிகளில், பயணம் செய்யும் பொதுப்போக்குவரது பஸ்களில், அலுவலகங்களில் காணும் ஆடைகளை ஒத்திருந்தன.
- பெரும்பாலும் இலங்கை பொருற்கள் அல்லது சேவைகளுக்கான விளம்பரங்களாக இருந்தன.
- ஆபாசத்தைதூண்டும் அல்லது எல்லைமீறிய ஏதேனும் விளம்பரங்களை (இதுவரை) காணக் கிடைக்கவில்லை.
- TV, Radio வை ஒத்த பின்னணி இசை இருந்தது.
எனக்குள் எழும் அடுத்த கேள்வி....
02. இவ்விளம்பரங்கள் இடம்பெறுவதுதான் குறித்த YouTube பfத்வா விற்கான அடிப்படை காரணமாக அமையுமாயின்....!
- அதே காட்சிகளை வெளியிடும் TV நிலையங்களை நடாத்துவது பற்றி-உழைப்பது பற்றி நாம் என்ன முடிவுக்கு வருவது..?
- அந்த தொலைகாட்சி நிறுவனங்களில் (உதாரணம்: Shakthi, sirasa, UTV) தொழில் செய்பவர்களுக்கு என்ன தீர்ப்பை கொடுப்பது..?
- இதே இசையுடன் கூடிய விளம்பரங்களில் வாழும் SLBC, முஸ்லிம் சேவை, இதர வானொலி நிலையங்கள் அதில் தொழில் செய்து வாழ்வோரின் வருமானம் பற்றி என்ன நிலைப்பாட்டை எட்டுவது..?
அதேவேளை...
03. YouTube என்ற தளத்தின் வருமானம் ஹராமெனில் அதற்க்கு மிகப்பெரும் பங்களிப்பு செய்யும் மக்கள் பார்வை மட்டும் ஹலாலாக அமைய முடியுமா...? எனவே மக்களை YouTube ஐ பார்க்க வேண்டாம் என வலியுறுத்தப் போகிறோமா..?
இன்னொன்று...
04. YouTube, Facebook, TV, Radio என்ற அனைத்து தளங்களிலும் இதுதான் நிலைப்பாடு எனில்....
இவ்வாறு எந்த ஒரு மீடியாவிலும் நாம் இல்லாமல் போவதே தீர்வாகவரும்போது...
இந்த ஊடக உலகில், இனவாதமும் இட்டுக்கட்டலும், பொய்யும், islamo phobia வும் தலைவிரித்தாடும் களத்தில்..
எம் சமூகத்தில் எது எஞ்சும்..?
நான் முதலிலே முன்வைத்ததுபோல....
இது தெளிவல்ல... தேடல்... தீர்ப்பல்ல... கலந்துரையாடல்...
கண்ணியமாய் கருத்துக்களை பேசுவோம்... இன்ஷா அல்லாஹ்...
புத்தளம் மரிக்கார்.
15-05-2023
0 Comments