Subscribe Us

header ads

இலங்கையின் அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பதை சற்று நோக்குவோம்!

 


ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள். ஜனாதிபதி 4 வருடத்தின் பின் ஜனாதிபதி தேர்தல் நடத்தலாம்.

அமைச்சர்கள் மாத்திரம் பதவி நீங்கினால் அமைச்சரவை கலையாது. பிரதமர் பதவி நீங்கினால் அமைச்சரவை கலையும்.

அமைச்சரவை கலைவது ஜனாதிபதியின் பதவியைப் பாதிக்காது.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை 2-1/2 ஆண்டுகளின் பின்னரே கலைக்கலாம். பாராளுமன்றம் 1/2 பெரும்பான்மை மூலம் கேட்டுக்கொண்டால் 2-1/2 ஆண்டுகளுக்கு முன்னரும் கலைக்கலாம்.

பாராளுமன்றத்தில் அரசாங்கம் பெரும்பான்மை இழந்தால் அமைச்சரவை பதவி விலக வேண்டும். இதனை 1/2 பெரும்பான்மையிலான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் நிரூபிக்கலாம்.

ஜனாதிபதி பதவி விலகினால் ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்திலிருந்து ஒருவர் 1/2 பெரும்பான்மை மூலம்[மிகுதிக் காலத்துக்கு] ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதுவரை பிரதமர் பதில் கடமையாற்றுவார். பிரதமர் பதவியும் வெற்றிடமாக இருக்குமாயின் சபாநாயகர் பதில் கடமையாற்றுவார்.

இதில் ஏதேனும் மாற்றம் தேவையெனில் 2/3 பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பைத் திருத்த வேண்டும்.

M o h a m e d M u h s i n......

Post a Comment

0 Comments