Subscribe Us

header ads

கோதுமை மாவின் விலையேற்றத்தால் மூடுவிழா காண தயாராகும் பேக்கரிகள்.

 


கோதுமை மா நிறுவனங்களினால் வெதுப்பகங்களுக்கு விநியோகிக்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரியளவான வெதுப்பகங்களுக்கு நிறுவனங்கள் கோதுமை மா விநியோகித்தாலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பகங்களுக்கு போதியளவு கோதுமை மா கிடைக்காமையினால் பல்வேறு வெதுப்பகங்களை மூடவேண்டி ஏற்பட்டுள்ளது.

கோதுமை மாவின் தரத்திலும் பிரச்சினை இருப்பதாகவும் இதனால் பாண் விற்பனை பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனா். தரமில்லாத கோதுமை மாவினால் உற்பத்தி செய்யப்படும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளை தயாரிக்க முடியாமை உள்ளிட்டபல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனா்.

நிறுவனங்களினால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டமையினால் பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை 5 ரூபாவிலிருந்து 10 ரூபாவரையில் அதிகரிக்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளா்களின் சங்கம் கோரியிருந்தாலும், இதுவரையில் உற்பத்திகளின் விலையை 20 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

முட்டை விலை 25 ரூபாவிலிருந்து 30 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டமை, மரக்கறி, மீன், இறைச்சி மற்றும் வெதுப்பக உணவுகளுக்கான மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளமையினால் வெதுப்பக தொழிலாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments