கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கட்டப்பட்டிருக்கும் அழகிய மூன்று மாடிக்கட்டிடமான தம்பி நெய்னா மரிக்கார் மூன்று மாடிக்கட்டிடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆடம்பரமில்லாமல்லாமல் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் ரோஸ் புகாரி அவர்களின் தலைமையில் சமய அனுஷ்டானங்களுடன் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அதிபர் ரோஸ் புகாரி அவர்கள் இந்த அழகிய மூன்று மாடிக்கட்டிடம் அமைப்பதற்கு உதவிய அரசியல்வாதிகள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
-RIZVI HUSSAIN-
0 Comments