Subscribe Us

header ads

ஊழல் மோசடிகளின் மூலம் உழைத்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்! - பசில் ராஜபக்ச அறிவிப்பு

 


ஊழல் மோசடிகளின் மூலம் உழைக்கப்படும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியினால் திரட்டப்பட்ட சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது போன்று, ஊழல் மோசடிகள் மூலம் உழைக்கப்பட்ட சொத்துக்கள் என நிரூபிக்கப்பட்டால் அவை அரசுடமையாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அவற்றை வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென அவர் நாடாளுமன்றில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் உணவுப் பொருள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment

0 Comments