Subscribe Us

header ads

மேலும் 5 அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யதால் மாத்திரமே சதோசவில் அரிசி, சீனி

 


இன்று (04) முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.


இதன்படி, அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கு மேலதிகமாக மேலும் 5 பொருட்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி, சீனி ஆகிய பொருட்களை மாத்திரம் பெற முடியாது.தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் மாத்திரம் அரிசி, சீனி விற்பனை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வர்த்தகத்துறை அமைச்சில் புதன்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளi; சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடுப்பிட்டார்.
அரிசியின் விலை நிலையாக பேணும் வரையில் எல்லையற்ற வகையில் அரிசி இறக்குமதி செய்து 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் விநியோகிப்பேம்.

லங்கா சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக அரிசி குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும். நுகர்வோர் ஒருவர் 5 கிலோகிராம் நாடு வகை அரிசியை 99 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடியும்.

தனியார் துறையினர் அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வார காலத்திற்குள் அரிசியின் விலை குறைவடையும்இ

லங்கா சதொன விற்பனை நிலையத்தின் ஊடாக வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 122 ரூபாவிற்கும்இ சிவப்பு சீனி 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

ஒருவருக்கு 5 கிலோவிற்கு அதிகமாக சீனி வழங்கப்படமாட்டாது. மஞ்சள்இ பருப்புஇ தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பயறு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் லங்கா சதொச விற்பனை நிலையத்தில் அரிசி,  சீனி ஆகியவற்றை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது.மேலதிகமாக மேலும் 5 அத்தியாவசிய  பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும். 

நட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்களை சதொச ஊடாக விநியோகிக்கிறோம்.

Post a Comment

0 Comments