கத்தார், சவுதி வான்வெளி, நிலம், கடல் எல்லை இன்று(ஜன-05) இரவு திறக்கப்படவுள்ளதாக குவைத் உறுதிப்படுத்தியுள்ளது.
கத்தார், மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையில் ஏற்பட்ட இராஜ தந்திர உறவுப் பிரச்சினையைத் தொடர்ந்து குவைத்து மஸ்தியஸ்தம் செய்து வந்த நிலையில், குவைத்தின் வெளியுறவுத் அமைச்சர் ஷேக் டாக்டர் அகமது நாசர் அல் முகமது அல் சபா அவர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை சற்று நேரத்திற்கு முன்னார் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 5ம் திகதி கத்தாருடனான உறவுகளை சவுதி நிறுத்திக் கொண்டதோடு வான்வெளி, நிலம், கடல் எல்லை போன்ற எல்லைகளையும் சவுதி மூடியது. மூன்று வருடங்கள் தொடர்ந்து வந்த பிரச்சினைகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அவர்கள் நாளை GCC (Gulf Cooperation Council ) கூட்டத்தில் கலந்து கொள்ள சவுதி அரேபியா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments