கல்பிட்டியில் சிறப்பாக இயங்கி வரும் சங்கங்களின் ஒன்றானதும் காலத்திற்கு ஏற்ற தேவையான சேவைகளை செய்து வரும் பெரிய குடியிருப்பு முதியோர் சங்கம், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமது சங்க உறுப்பினர்களை பாதுகாக்கும் முகமாகவும் முககவசம் (Mask)அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் முகமாகவும் தமது சங்கத்தின் சொந்த நிதியின் மூலம் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் முகக்கவசம் (Mask) வழங்கும் சிறப்பான சேவையை இன்று ஆரம்பித்தது.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் கல்பிட்டி பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்தின் தலைவர் M.H.H.ஹம்ஸா அவர்கள்,சங்கத்தின் செயலாளர்M.N.M.அபுல் ஹஸன்(சியாத்)அவர்கள் மற்றும் சங்கத்தின் தனாதிகாரியாக தனது சிறப்பான சேவையாற்றி வரும் ஓய்வு பெற்றும் ஓய்வு பெறாத ஆசிரியர் S.M.S.ஆப்தீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சதாவும் சங்க உறுப்பினர்களுக்கு ஏதாவது ச செய்ய வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வரும் கல்பிட்டி பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்திற்கு தனவந்தர்கள் சமுக சேவகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கு சங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
-Rizvi Hussain-
0 Comments