யாழ்ப்பாணத்துல அப்பம் தின்னாகனும்னு அடம் பிடிச்ச நண்பர் ரமலிய கூட்டிக்கிட்டு... என்னதான் அலைஞ்சாலும் அன்னைக்கு இறைவன் அனுமதித்திருந்தது ஆயிஷால 'ஷோட் ஈட்ஸ்' தான்...
அதைக் கூட ரசிச்சு சாப்பிட்டாங்களோ தெரியல... நான் சீரியசா யாழ் பல்கலை மாணவர்களோட டிஸ்கஷன்.. மீண்டும் நண்பர் ரமலி மற்றும் பொறுமையோடு என் பயணத்துக்கும் நோக்கத்துக்கும் ஒத்தாசையாயிருந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மஹ்ரூப் ஏ காதருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
1990..ஸ்கூல் லீவுல உம்மம்மா வீட்டுக்கு போயிருந்த நேரத்துல... இடம்பெயர்ந்து வந்திருந்த ஒரு தொகுதி மக்களுக்காக ஏதோ எங்கள் அறிவுக்குப் பட்ட திட்டங்களை வகுத்து, உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வீதிக்கிறங்கியது தான் எனக்கும் முதலாவது களப்பணி அனுபவம்...
உணர்வுபூர்வமானது. ஆதலால், ஒவ்வொரு வருடமும் வடபுலத்திலிருந்து முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்ட நிகழ்வு நினைவில் வந்து தங்கிக் கொள்கிறது.
எப்படியாயினும், ஒரு தடவை யாழ் சென்றாக வேண்டும் என்ற எண்ணம் 2018ல் தான் நிறைவேறியது. அங்கு சென்று திரும்பும் போது, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற துன்பியல் அனுபவங்களை மாத்திரமன்றி, வரும் வழியில் புத்தளத்தின் .... Host Community எதிர்நோக்கி வந்த சவால்கள் குறித்த அனுபவப் பகிர்வுகளையும் பெற்றுக் கொண்டே திரும்பினேன்... அதன் கனம் இன்னும் குறையாமல் இருந்து கொண்டிருக்கிறது.
தொடர்ச்சியாக யாழ் முஸ்லிம் சமூகம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எவ்வாறு இயங்கி வருகிறது.. உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வோரின் மனோநிலை, செயற்பாடு, மீள் குடியேற்றம் மீதான ஆர்வம் என பல்வேறு விடயங்கள் குறித்து எப்போது தகவல் அறியக் கிடைத்தாலும் அதை முழுமையாகப் பெற்றுக் கொள்ளத் தவறுவதில்லை.
கடந்த வருடம் ஐக்கிய இராச்சியத்தில் யாழ் முஸ்லிம் சமூக அமைப்பினரால் (Jaffna Muslim Association - UK) நடாத்தப்பட்டிருந்த நிகழ்விலும் கலந்து கொண்டு பலரை நேரில் கண்டு... ஒரு சிலரின் 80.. 90ம் ஆண்டு அனுபவங்களை அறிந்து கொண்டதிலும் பெரும் மகிழ்ச்சி.. அன்போடு நிகழ்வுக்கு அழைத்த அமைப்பின் தலைவர் சகோதரர் கியாசையும்.. என்னைச் சூழ்ந்திருந்து அன்பாகக் கவனித்து உபசரித்த... அனைத்து சகோதரர்களையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
2019ல் ... மறக்கப்பட்ட யாழ் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் என் பயண அனுபவமடங்கிய சிறு கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தேன்... வாசிக்க விரும்புபவர்களுக்காக அதற்கான லிங்க் (https://www.sonakar.com/2019/02/blog-post_597.html )
கருப்பு ஒக்டோபர் என்று சொல்லிக் கொண்டே 30 வருடங்கள் கழிந்த நிலையில்.. அம்மக்களின் உண்மையான அபிலாசைகளுக்கு மரியாதையிருக்கிறதா? என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது. இன்று இது தொடர்பில் லண்டன் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் (TBC) ஏற்பாடு செய்திருந்த வீடியோ கலந்துரையாடல் ஒன்றில் பகிரப்பட்ட கருத்துக்கள் மற்றும் அதன் பிரதிபலிப்புகள் என் கேள்விகளுக்கு இன்னும் வலுச் சேர்த்துள்ளன.
இதைப் பேச வேண்டியவர்கள் பேசுகிறார்களா.... அல்லது பேசாமைக்கு என்ன காரணம்? இதில் அரசியலின் பங்கென்ன... அரசின் பங்கென்னவென கேள்விகள் ஆயிரம்.
எவ்வாறாயினும், உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்வதற்கும் ஒரு விலையிருக்கிறது.... அதை அந்த மக்கள் எல்லா இடங்களிலும் ... எல்லா தருணங்களிலும் செலுத்தி வந்திருக்கிறார்கள். இன்னும்.... செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினால் கூட மிகையாகாது என்பதே எனது நிலைப்பாடு.
இந்த இடைச்செறுகலில் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் நிலவும் இன ரீதியிலான அரசியல் பிளவுகளின் பங்கென்ன என்பது அலசப்படுவதும்... தீர்வு நோக்கிய முன்னகர்வுகளுக்கு சிவில் சமூகம் முன்னெடுப்புகளை மேற்கொள்வதும் கூட கட்டாயம் என்பது எனது கருத்து.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களா? என்ற கேள்வியும் அண்மையில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று!
30-10-20


0 Comments