ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர் ஒருவர் கல்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பிட்டி நிர்மலமாதா சிங்கள பாடசாலையில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்ற வந்த ஒருவரை பரீட்சை கண்காணிப்பு குழுவின் சந்தேகத்தையடுத்து கல்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (23) அரசியல் விஞ்ஞான பாடத்தின் போது இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவர் களணி பல்கலைக்கழக மாணவர் என்பதுடன் உளுக்காப்பளம் பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவருமாவார்.
Irfan Rizwan
23/10/2020


0 Comments