Subscribe Us

header ads

கல்பிட்டி தேத்தவாடி கிராமத்தில் பொதுக்கிணறு மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு


நீண்ட கால தேவையாக காணப்பட்ட கல்பிட்டி தேத்தவாடி கிராம மக்களின் நீர்த்தேவைக்காக வேண்டி பொதுக்கிணறு இன்று உத்தியோகபூர்வ மக்களின் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது. 

கல்பிட்டி பிராந்திய செய்தியாளரும், சமூக ஆர்வளரும், வை.எம்.எம்.ஏ அங்கத்தவருமான இர்பான் ரிஸ்வானின் வேண்டுகோளிற்கமைய புத்தளம் வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிஸாரின் முயற்சினால் இன்று ( 2020-09-20) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வை.எம்.எம்.ஏ பிரதிநிதிகளான உதவி அதிபர் முஹ்சி  மற்றும் ஊர்வாசிகள் கலந்து கொண்டனர். மேற்படி திட்டம் அகில இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் (YWMA - Sri Lanka) மூலம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments