Subscribe Us

header ads

மீண்டும் இலங்கையை மூடும் அபாயம்

கொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு, அந்த பிரதேசங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் சேனால் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காது போனால், நாட்டை மீண்டும் மூட நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், நாடு அப்படியான இடத்திற்கு மீண்டும் செல்வதை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,இலங்கையில் திடீரென கொரோனா ரைவஸ் பரவலின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments