நாட்டில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம்.
இதுவரையில் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் இலங்கையரொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றானது இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் மீண்டும் திடீரென கொரோனா வைரஸ் தாக்கமானது நாட்டில் தலைதூக்கியுள்ள போதும் இது சமூக பரவலாக மாற வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்து.
0 Comments