Subscribe Us

எனது பெறுமதி ஊருக்கு தெரியவில்லை : நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை ஒப்பிடுங்கள் (மைத்திரி)

முழு பொலன்னறுவை மாவட்டத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுத்த தனக்கு எதிராக தனது ஊரை சேர்ந்த சில நபர்கள், பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊரில் உள்ள பெரும்பான்மையானவர்கள் தனது பெறுமதியை அறிந்துள்ளதாகவும் ,எனினும் சில நபர்கள், பொலன்னறுவையை மறு நிர்மாணம் செய்த தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி,ஊரில் உள்ள வாக்காளர்களின் மனதை மாற்ற முயற்சித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன,
நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அறிமுகமான அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட பல நாடுகளின் அரச தலைவர்கள் தொடர்ந்தும் என்னுடன் தனிப்பட்ட ரீதியில் நட்பாக இருந்து வருகின்றனர்.

நான் விரும்பும் எந்த நேரத்திலும் அந்நாடுகளின் தலைவர்களை தொடர்புக்கொள்ள முடியும் அளவுக்கு உறவு வலுவாக உள்ளது. இப்படியான பெறுமதிமிக்க நபரின் பெறுமதியை பொலன்னறுவையை சேர்ந்த சிலர் மறந்து போயுள்ளனர்.

எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக்கூறும் நபர்கள் பொலன்னறுவைக்கு என்ன செய்தார்கள் என்று கேளுங்கள். ஊரை சேர்ந்தவனுடைய பெறுமதியை உணர்ந்துக்கொள்ளுங்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கட்சியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments