Subscribe Us

header ads

- Corona virus- கட்டுக்கடங்கா சாம்ராஜ்ஜியமான அமெரிக்காவில் என்ன நடக்கின்றது (விபரங்கள் உள்ளே)


"You guys so blessed" இலங்கையிலுள்ள இலவச மருத்துவ சேவை பற்றியும், இலவசக் கல்வி (பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை) பற்றியும் என்னிடம் கேட்டறிந்த அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்கக் குடிமகன் ஒருவரே சொன்ன வார்த்தை இது. (இது ஓரிரு வருடங்களுக்கு முன்னர் நடந்தது)

இன்றைய நாட்களில் WhatsApp, messager களில் வந்து குவியும் வினாக்களில் முக்கியமானது, "நீங்கள் நலமா?" என்றுதான்.

"அல்ஹம்துலில்லாஹ்" இதுவரை எந்தப் பாதிப்புக்களுமின்றி சுகமாக இருக்கிறோம். ஆனால் அமெரிக்காவின் நிலையோ நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை.

அமெரிக்கா. உலகில் ஒரு வல்லரசு நாடு. அதாவது எல்லா உயர் தொழிநுட்பங்களும் இருக்கின்றன என்று தம்மை மார்தட்டிக் கொள்ளும் நாடு என்றாலும், "அமெரிக்கா" என்ற ஒரு விம்பம் இந்நாட்களில் நாளுக்கு நாள் நாறிக் கொண்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.

வழமை போல, தமக்கு எல்லா வசதிகளும் உள்ளன, தம்மால் எதுவும் செய்து விட முடியும் என்று அமேரிக்கர்கள் நினைப்பது போலவே, அமெரிக்க அதிபரும், காமடிப் பீஸுமான Donald Trump இந்த Corona virus பரவத் தொடங்கிய காலப் பகுதியில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, ஆயிரமாகி, இன்று லட்சத்தில் வந்து நிற்கிறது அமெரிக்காவின் Coronavirus நோயாளிகளின் எண்ணிக்கை. இதற்கு முதல் காரணம் அந்த காமெடிப் பீஸ் ஜனாதிபதி என்றால், அவரோடு சேர்ந்து பரையடிக்கும் இங்குள்ள மக்களும் தான். இங்கு சாதாரணமாக ஒரு வைத்தியசாலைக்குச் சென்று உங்களால் நினைத்த மாத்திரத்தில் மருந்துகள் எடுத்து விட முடியது. இங்கு Medical insurance முறைமை ஒன்று உள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் medical system என்பது என்னதான் உலகத்தில் சிறந்ததாக வர்ணித்தாலும், அது ஒரு தோல்வியடைந்த முறைமையாகக் காணப்படுகிறது.

நீங்கள் வாகனத்திற்கு insurance போட்டிருப்பீர்கள். வாகனத்தின் நிலமை, ஆபத்துக்களின் நிலமை, வாகனம் வைத்திருப்பதவரின் வயது, அனுபவம் என்பனவற்றை வைத்து insurance தொகை நிர்ணயிக்கப் படுவது போல,

ஒருவரது வயது, அவருடைய உடல் தோற்றம், நோய்களின் தன்மை என்பனவற்றை வைத்து அந்த insurance தொகை தீர்மானிக்கப் படும். நீங்கள் மருந்து எடுத்தீர்களோ, இல்லையோ, மாதாமாதம் insurance கட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 500 டாலர்களுக்குக் குறையாத தொகை மாதாந்தம் கட்ட வேண்டி வரும். (500 டாலர்கள் என்பது ஒரு நடுத்தர வருமானம் பெரும் தனிநபர் ஒருவரின் பாதி வருமானம்/ மூன்றில் ஒரு பகுதி).

அமெரிக்காவில் 27.5 மில்லியன் மக்கள் இந்த healthcare insurance எடுப்பதில்லை. அத்தோடு வருடாந்தம் இந்த insurance பணத்தொகையைக் கட்ட முடியாத காரணத்தால் insurance எடுக்காமல் இறப்போர் தொகை 26,000 பேர் என்கிறது ஒரு ஆய்வு.

இது இவ்வாறிருக்க, இந்த Health insurance எடுத்திருந்தாலும், (நிறைய health insurance கம்பனிகள் இருக்கின்றன) ஒரு கம்பனியில் எடுத்த health insurance ஐ குறிப்பிட்ட சில வைத்தியசாலைகள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளும். அதாவது health insurance எடுத்திருந்தால் கூட, சில இடங்களில் அவை ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. அத்தோடு உதாரணத்துக்கு ஒரு மருத்துவ சிகிச்சை (Medical surgery) நடந்ததென்றால் அவற்றுக்குத் தனித்தனியாகத்தான் Bill போடப்படும். (உதாரணமாக வைத்தியசாலை செலவு, x-ray செலவு, anesthesiologist க்கான கட்டணம், surgeon , ஏனைய வைத்தியர்களுக்கான கட்டணம் எனப் பிரித்துப் பிரித்தே அறவிடப் படும்) அந்தவேளைகளில் சில insurance கம்பனிகள், தமது Agreement இல் மேற்சொன்ன ஏதாவது செலவொன்றை ஏற்றுக் கொள்ளாமலிர்ந்திருந்தால், அத்தொகையை எமது கைகளால் கட்ட வேண்டும்.

இந்த நிலையில்தான், அமெரிக்காவை இன்று கொரோனா தாக்கியுள்ளது. துரதிஷ்டவசமாக அமெரிக்காவோ நோய்த்தொற்றைப் பரிசோதிக்கும் test kid, அது போல வைத்தியசிலைகளுக்குத் தேவையான தற்காப்புக் கவசங்கள் (personal protection equipments/ PPE) போன்றன போதியளவு இல்லாத காரணத்தால், கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட பலருக்குக் கூட கொரோனா பரிசோதனையைச் செய்ய சில இடங்களில் மறுக்கப் பட்டுள்ளது.

அத்தோடு போதியளவிலான தற்காப்புக் கவசங்கள் (personal protection equipments/ PPE) இல்லாத காரணத்தினால் சில வைத்தியசாலை ஊழியர்கள் Garbage bags, துணிகள், பொலித்தீன் பைகளைக் கூட கட்டிக் கொண்டு வைத்தியம் பார்க்க வேண்டிக் கொள்ளப் பட்டுள்ளனர். N95 போன்ற Mask தட்டுப்படினால் ஒரு Mask ஐ முழு நாளும் அணிந்து கொள்ள வேண்டிக் கொள்ளப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் லான்காஸ்டரில் 17 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்படவே, அருகில் உள்ள தனியார் அவசரகால மருத்துவமனைக்குச் (Urgent care) சென்றுள்ளான். ஆனால், அவனுக்கு இன்சூரன்ஸ் இல்லாததால், சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர்.

அங்கிருந்து அவன் அரசு மருத்துவமனையைத் தேடிச் செல்வதற்குள் கார்டியாக் அரெஸ்டினால் உயிர் பிரிந்துவிட்டது. இதனை அந்நகர மேயர் உறுதிப்படுத்தியருக்கிறார்.

முதலாளித்துவம் பணம் இருப்பவனை மட்டுமே காப்பாற்றும். மற்றவர்களைச் சாகவிடும் என்பதற்கு ஒரு உதாரணம் இது.

இந்த நிலை இன்னும் மோசமடையலாம். வரும் வாரங்களில் இத்தாலியை விட மோசமான நிலமைக்கு அமெரிக்கா தள்ளப்படலாம். இறைவனே அறிந்வன்.

கோடி கோடியாய் ஏனைய நாடுகளைப் பிடிக்கவும், யுத்தங்களுக்கும் செலவளிக்கும் இவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து கொள்ள முடியாமல் தினருவதற்கு காரணங்களும் உண்டு.

பொதுவாக மருத்துவம், வீடு போன்ற மனிதனது அத்தியவசியத் தேவைகளுக்கே அமெரிக்காவில் அதிகூடிய விலைகள் செலுத்த வேண்டும். (உதாரணமாக சாதாரண ஒரு வீடு வாங்குவதென்றால் ஒருவரது 40-50 வருட உழைப்புக்களைக் கொண்டுபோய் கொட்ட வேண்டும்).

அமெரிக்காவில் இன்றளவும் மிகப்பெரிய போராட்டமாக இருப்பது "இலவச மருத்துவம்" தான். இதற்காக சில அரசுகள் கூட போராடிப் பார்த்தன. ஆனால் அவை முதலாளித்துவ பணக்காரர்களின் கைகளில் இருப்பதனால் அவற்றின் விலைகள் என்றளவிலும் குறைந்ததோ, சாமானியனுக்கு இலகுவாகக் கிடைக்கும்படியாக வைத்தோ இல்லை. இலகுவாகச் சொன்னால் இதுதான் முதலாளித்துவம்.

இன்றளவிலும் இங்கிருக்கும் மக்கள் இந்த நோயை கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. அதை விட நாட்டு அதிபரோ இதை வைத்துக் காமெடி பன்னிக் கொண்டே இருக்கிறார். துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

America is not a greatest country anymore.

இலங்கை போன்ற நாடுகளில் நீண்ட வரிசைகளில் நின்றாலும், தாதிமார், attendance என்னதான் உங்களுக்கு ஏசினாலும், எத்தனை கசப்பான சம்பவங்கள் இருந்தாலும் நாள் முடிவில் உங்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்கிறது என்று ஆறுதல் படுங்கள். எந்த மருத்துவ உதவியும் கிடைக்காது இறந்து போகும் நிலை அமெரிக்காவிலேயே இருக்கும் போது, குறைந்தபட்சம் ஒரு நோய்க்காக எத்தனை மணிநேரக் காத்திருப்புக்கள் இருந்தாலும், ஒரு சதமேனும் காசு கொடுக்காமல் பெறும் இலவச மருத்துவ சேவையைப் பெற்ற எமது நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்.

"முற்றத்து மல்லிகை பொதுவாக மனப்பது குறைவு"

குறிப்பு:- ஒருசில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மறுபக்கத்தைப் பற்றியும், முதலாளித்துவத்தின் மோசமான விளைவுகளையும் எழுதிய போது "இதென்னயா நீ கடுப்புல இல்லாத பொல்லாத எல்லாம் எழுதுறாய், ஒரு சோகத் தாண்டவமாய் இருக்குதே" என்று முட்டிக் கொண்டவர்களுக்கான பதில்,

"இன்னும் ஒரு மாதமளவில் அமெரிக்காவே பதில் சொல்லும்"

#trumpliepeopledie (trump lie, people die) என்ற ஒரு hashtag Twitter இல் trend ஆகிறது. தேடினால் நீங்கள் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

Pray for America.

Post a Comment

0 Comments