சுமார் 10 நாட்களுக்கும் மேலாக நாம் இருந்துவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிலையம் போல ஒரு நிலையம் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுவருகிறது. இதற்கு உழைக்கும் புத்தளம் முப்படை பிரிவினர் உற்பட நகரசபை மற்றும் ஏனைய அரச நிருவனங்கள் வேகமாக வேலை செய்வதை அவதானிக்க முடிகிறது. அவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்க வேண்டியது நமது பொருப்பு. “நான் தனிமைப்படுத்தப்படவேண்டும்” என்று என்னும் நம்மவர்கள் அங்கு சென்று நம் சமூகத்திற்காக 14 நாட்கள் இருப்பது மிகப்பெரிய நன்மையான காரியம் ஆகவே அவசரமாக முன்வருவோம். முன்வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்படக்கூடியவர்கள்.
இங்கு செல்வதற்கு யாரும் பயப்படத்தேவை கிடையாது, முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பாடசாலை நாட்களை மீண்டும் சுவைக்க ஒரு அழகான சந்தர்ப்பம். #Quarantine #Corona #COVID19
குறிப்பு: சாஹிரா பாடசாலையை விட குவைத் வைத்தியசாலை மிக பொருத்தமான இடம் என்றாலும் அதற்கான அனுமதிகள் உரிய நேரத்தில் உரிய அமைப்புகளிடம் இருந்து கிடைக்கவில்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எல்லாம் நன்மைக்கே என்று, எடுத்த முடிவுக்கு விமர்சனங்கள் இன்றி வலு சேர்ப்போம் #புத்தளம்சமூகம்
-isham marikkar-
0 Comments