Subscribe Us

header ads

மட்டக்களப்பில் கொரோனா தொற்றுள்ள முதலாவது நபர் இனங்காணப்பட்டார்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பில் கொரோனா தொற்றுள்ள முதலாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்தவர் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்த நிலையில் ஞாயிற்றக்கிழமை 16.03.2020 சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் காரணமாக மட்டக்களப்பு மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் அவதானத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments