ஃபேஸ்புக் நண்பர்கள் கூடும் போதும் சரி, சும்மா நாலு பேர் சேரும் போதும் சரி தனிமனித வெறுப்பில் இன்னொருவரின் பயோடேட்டாவை பெரிய ஊடகப் புடுங்கிக் கணக்காய் அடித்துவிட்டு சுய இன்பம் கண்டு விளையாடுவது போல கொரானா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களைப் பட்டியலிட வேண்டாம்.
கனடா பிரதமரின் மனைவி,இளவரசர் சார்ள்ஸ்,பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன்,பிரபல ஹாலிவூட் நடிகர் டொம் ஹேன்க்ஸ் போன்றோர் தமக்கு கொரானா இருப்பதை பகிரங்கமாய் அறிவித்தது இந்த நோயின் சீரியஸ்தனத்தை மக்கள் அறிந்து கொள்வதற்காக..
மேலை நாடுகளில் எய்ட்ஸ் இருப்பதையே சாதாரணமாய் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.ஆனால் இது போன்ற மூன்றாம் உலக நாட்டின் தார்ப்பீப்பாய் போன்ற இருண்ட சமூகத்தில் அதே மேலை தேச ஸ்டைலில் "எனக்கு கொரானா பொசிட்டிவ் இருக்கிறது" என்று சொல்ல முடியுமா.நோய்வாய்ப்பட்டவர் சொன்னாலும் ஆர்வக் கோளாறு ப்ரேக்கிங் நியூஸ் சொம்புகள் ஃபோட்டோ எல்லாம் போட்டு இன்னும் பட்டி தொட்டி எல்லாம் பரப்பிவிடுவார்கள்.
109நபர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டு இருந்த போது அவர்களது குலம் கோத்திரம் எதுவும் தெரிந்து இருக்கவில்லை.ஆனால் 110 ஆவதாய் நபர் ஒருவர் அக்குறணையில் இனம் காணப்பட்ட போது அந்த நபர் வெட்ட வெளிச்சமானார். உங்களுக்கு நன்கு தெரிந்த இன்னும் நோயாளிகள் இனம் காணப்படலாம்.அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் உங்களுடன் முரண்பட்டு இருக்கலாம்.அப்படி எதுவும் இல்லாது இருந்தாலும் பெரிய பீபீஸி கணக்காய் மண்டையில் இருக்கும் களிமண் குலுங்க குலுங்க அந்நபரை அம்பலப்படுத்தாதீர்கள்.இது இன வெறுப்பு விபரீதங்களுக்கு வழிவகுக்கும்.ஸ்பெஷல் லொக்டவுன் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் இடங்களில் சிலரது IQ மட்டம் மைனஸிற்கு கீழ் இருப்பதால் இப்படி பதட்டப்பட வேண்டி இருக்கிறது.
-சாபர் அஹமட்-
0 Comments