Subscribe Us

header ads

Kalpitiya Football League 2019 நேற்று கோலாகலமாக ஆரம்பம்.


கல்பிட்டி உதைப்பந்தாட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் இளம் வீரர்களை அடையாளப்படித்தி ஊக்குவிக்கும் நோக்கிலும் கல்பிட்டியின் பழமைவாய்ந்த கழகமான Pearls Sportsclub இன் மாபெரும் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச சபையின் பூரண ஒத்துழைப்புடன் ஹஜ்ஜுப் பொருளாலை மகிழ்விக்கும் நோக்கிலும் Kalpitiya Football League 2019 கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களும் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்களும் , கல்பிட்டி ப.கூ.ச.தலைவர் P.M.M.பாஹிம் மற்றும் ஏற்பாட்டு குழு உறுப்பினர்களான சாஹிர் சேர்,ஆஸ்தீன் சேர்,நழீர் நாநா,பைரூஸ்,ரில்பாஸ்,பாஜில்,ரிசாத் சேர்,பெளஸான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மறைந்த கல்பிட்டியின் விளையாட்டு துறை ஆர்வலர் சர்சல்தீன் மற்றும் மறைந்த கல்பிட்டியின் விளையாட்டு வீரர்கள் ஞாபகப்படுத்தப்பட்டதோடு அவர்களுக்காக இரண்டு நிமிடம் சுய பிரார்த்தனை செலுத்தப்பட்டததும் விஷேட அம்சமாகும்.

-ஹுசைன்-

















Post a Comment

0 Comments