ஜனாதிபதித் தேர்தலில் இருவருக்கு மேற்பட்டோர் போட்டியிட்டால் செல்லுபடியாகும் வாக்குகளில் 50% திற்கு ஒரு வாக்கு தானும் அதிகம் பெற்றவர் வெற்றி பெரறுவார்.
இருவரெனில் செல்லுபடியான வாக்குகளில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெறுவார்..!
போட்டியிட்டவர்கள் மூவர் எனில் வாக்குச் சீட்டில் முதல் தெரிவும் இரண்டாம் தெரிவும் மாத்திரமே இருக்கும்.
மூவருக்கு மேல் எனில் முதற் தெரிவுடன் இன்னும் இரண்டு தெரிவுகள் இருக்கும்.
வாக்களிக்கும் பொழுது முதல் தெரிவிற்க்கு (அரபுஇந்திய இலக்கம்) 1 என்றும்
இரண்டாம் தெரிவிற்கு 2 என்றும் மூன்றாம் தெரிவு இருந்தால் 3 என்றும் இலக்கங்களால் வாக்களிக்க வேண்டும்.
முதல் தெரிவிற்கு 1 என்ற இலக்கம் அல்லது X புள்ளடி இருந்தாலும் செல்லுபடியாகும். ஆனால் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் இலக்கங்களாக தெளிவாக குறிப்பிடப் பட வேண்டும்.
இருவருக்குமேல் போட்டியிட்டு 50% மேல் எவரும் வாக்குகளை பெறாதவிடத்து..
முதலிருவர் தவிர்த்து ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்..
பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் முதலிருவருக்கும் இருப்பின் அவற்றை வேறுபடுத்தி கணக்கிட்டு கூடுதல் வாக்கைப் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அங்கும் 50% நிபந்தனை இல்லை.
பிரதான வேட்பாளருக்கு புறம்பாக சிறுபான்மை சமூகங்கள் சார்பாக அல்லது இடது சாரி கொள்கை சார்பாக, அல்லது மூன்றாவது அணியாக பல வேட்பாளர்கள் களமிறங்கும் சாத்தியப் பாடுகள் இருப்பதனால் இம்முறை இரண்டாவது மூன்றாவது வாக்குகளும் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கலாம்.
தேர்தல் வியூகங்களுக்காகவும் பிரதான கட்சிகள் அவ்வாறான வேட்பாளர்களை களமிறக்களாம்.
உதாரணமாக விக்னேஸ்வரன் அல்லது ஹகீம் அணியினர் தாம் ஆதரிக்கும் பிரதான அணிகள் சார்பாக களமிறக்கப்படலாம்.
அவ்வாறான ஒரு முன்மொழிவு ஒரு தரப்பு சார்பாக என்னிடமும் முன்வைக்கப்பட்டது.
சிறுபான்மை சமூகங்கள் மிகவும் விளிப்புடன் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
0 Comments