கல்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியில் காணப்படும் பழமைவாய்ந்த தலவான் கன்னி குளம் தான் இது.
இக்குளத்தின் வரலாற்று சுருக்கம் கல்பிட்டி இளைஞர் ஒருவர் மன்னார் பகுதி உயர் சாதி பெண் ஒருவரை திருமணம் செய்து உள்ளார் ,கல்பிட்டிக்கு வாழவந்த அப்பெண் தான் குளிப்பதற்கு நீர் தடாகம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அந்த இளைஞராலும் அக்குடும்பத்தார்களாலும் அமைக்கப்பட்டது தான் இந்த தலவான் கன்னி குளத்தின் வரலாறு என்று குறிப்பிடுகிறார்கள் ,இருந்த போதும் இக்குழத்தை அன்று சின்னக்குடியிருப்பில் வாழ்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தியதாகவும் அவர்களின் அன்றைய வாழ்க்கையில் ஒரு அத்தவசியமானதாக இக்குளம் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
எமது கல்பிட்டி பகுதி நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ளதாலும் வரட்சியான நிலப்பரப்பு என்றபடியினாலும் நன்னீர்களை சேமித்து வைக்கும் முகமாகவும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாகவும் எமது முன்னோர்களால் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டதே இக்குளங்கள்.
கல்பிட்டியில் தனியார் காணிகளிலும் அரச காணிகளிலும் சுமார் 12 குளங்கள் காணப்பட்டதாகவும் அதில் பெரியபள்ளிவாசல் குளம் மற்றும் இந்த குளமான தலவான் கன்னி குளம் ஆகியனவே எஞ்சி இருந்தன தனியாருக்கு சொந்தமான இந்த குளமும் அத்திவாரமிடப்பட்டு மண் நிறப்பப்பட்டவுள்ளது,இதன் வரலாறும் முடிவடைகிறது.
கல்பிட்டியில் குளங்கள் காணப்பட்டன அல்லது இது தான் பழங்காலத்து குளம் என்று எமது வருங்கால சந்ததிகளுக்கு காட்டுவதற்காக வேண்டியாவது கல்பிட்டி வாழைத்தோட்டத்தில் அமைந்திருக்கும் பெரிய பள்ளிவாசல் குளம் புனர் நிர்மானம் செய்யப்படுமா ?
-Rizvi Hussain-






0 Comments