இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இரத்த உறவுகள் சுமார் 200 பேரை சவுதி மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் ஹஜ் செய்திட சவுதி மன்னர் ஸல்மான் அவர்களின் சொந்த செலவில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை உடனே துவங்குமாறு நியூஸிலாந்தில் உள்ள சவுதி தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் ஹஜ்ஜிற்கான வாய்ப்பு பயங்கரவாத வாதத்தால் உயிரிழப்புகளை சந்தித்த உறவுகளுக்கு மன ஆறுதலாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் வழமைபோல் 2000 பாலஸ்தீன உயிர் தியாகிகளின் உறவினர்களும், 72 உலக நாடுகளிலிருந்து 1300 பேரும் மன்னரின் சார்பாக இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்


0 Comments