கல்பிட்டியில் பல பொது விடயங்களுக்கு இடம் வழங்குவதில் பிரச்சினைகள் காணப்படும் இந்த தருணத்தில் தானாக முன்வந்து எமது சமூகத்தின் முக்கிய பணியான காதி நீதி மன்றத்திற்கான சேவைகளை நடாத்துவதற்கு பஸார் பள்ளியின் மத்ரஸா பகுதியை வழங்கியது மாத்திரமல்லாமல் தனியான மலசலகூட வசதிகளையும் அமைத்து கொடுத்து முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருக்கும் பஸார் பள்ளி நிர்வாகத்தினரின் செயல்பாடு கல்பிட்டி பொதுமக்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது .
இதேபோல இவர்களுடைய இன்னும் ஒரு மிக முக்கியமான சமூகப் பணியையும் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும் அதாவது தற்போது கல்பிட்டியின் மிக முக்கியமான ஆரம்ப பாடசாலையான அல் -ஹிரா பாடசாலை அமைப்பதற்கு பஸார் பள்ளி தோட்ட காணியை வழங்கியதோடு அப்பாடசாலை அமைப்பதற்கு முழுமூச்சாக ஈடுபட்டது மாத்திமல்லாமல் தற்போது வரைக்கும் பாடசாலையின் அபிவிருத்தி பணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
யா அல்லாஹ் இவர்களுடைய மேலான பணியை பொருந்திக்கொண்டு நிர்வாகத்தினருக்கு மேலான நற்கூழியையும் மென்மேலும் சமுகத்திற்காக செயலாற்றுவதற்கு ஒத்துழைப்பையும் வழங்குவாயக
ஆமீன்
-Rizvi Hussaina



0 Comments