Subscribe Us

header ads

வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கினார். அதைப்போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள்.. (மைத்திரி வேண்டுகோள்)


வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கினார். அதைப்போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள்..
 முல்லைத்தீவில் நடந்த அரச நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நூற்றுக்கு 80 வீதமான முல்லைத்தீவு மக்கள் எனக்கு வாக்களித்தனர். நாட்டை ஆண்ட ஆறு ஜனாதிபதிமாரில் நான் தான் கூடுதலாக முல்லைத்தீவு வந்துள்ளேன்.
முல்லைத்தீவில் வறுமை நிலைமை உள்ளது.அதனை இல்லாமலாக்க நாம் செயற்படவேண்டும். இன மத குல பேதங்களால் பிரிந்துள்ள நாம் நாட்டை மேம்படுத்த ஒன்றுபட வேண்டும்.
போரில் பலரின் காணி உறுதிகள் அழிந்துள்ளதாக அறிந்தேன்.இதனால் வங்கிக் கடன் கூட எடுக்க முடியாத நிலைமை உள்ளது .இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் பேசி நிவாரணம் கொடுப்பேன்.
நாடு ஒன்றாக இருக்கவேண்டுமானால் மகா சங்கத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும்.இதர மதத் தலைவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள்.அது கவலைக்குரியது.
தேர்தலை இலக்கு வைத்து செயற்படுகின்றனர். அடிப்படைவாதம் கூடாது.

அண்மைய தாக்குதலின் பின்னர் நாட்டு பொருளாதாரம் வீழ்ந்தது. உயிரிழப்புக்கள் நடந்தன. ஆனால் பிரிவினை அதிகரித்தது. தீவிரவாதிகள் இலக்கை அடையும் வகையில் செயற்பட்டனர். தீவிரவாதிகளின் நோக்கம் அடையப்பட்டுள்ளது.

அந்த நோக்கத்தை ஈடேற இடமளிக்க வேண்டாம்.

வடக்கில் ஒரு பிரபாகரன் உருவானது போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவேண்டாம்.அண்மைய தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தில் தான்.அதை அடைய செய்ய இடமளிக்க வேண்டாம். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் கேட்கிறேன்.
முல்லைத்தீவில் வனவளம் நன்றாக உள்ளது. மரம் வெட்டும் மெஷின்கள் பதியவேண்டுமென நான் கோரிய பின்னர் இரு வாரத்திற்குள் 82 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். ஆனால் இன்னும் 25 ஆயிரம் வரை பதியாமல் உள்ளதாக தெரிகிறது.
மரக்காலைகளை புதிதாக பதிய கூடாது என்று நான் கூறினேன். இன்று பத்திரிகை பார்த்தேன்.அப்படியானால் சவப்பெட்டிகளை எவ்வாறு செய்வர் என்று யாரோ கேட்கின்றனர்.மரக்காலைகளிலா சவப்பெட்டி செய்கின்றனர்?அது சவச்சாலைகளில் செய்யப்படுகின்றது.இப்போது நான் கூறியமைக்கு எதிராக பேசுகின்றனர்.
– என்றார் ஜனாதிபதி

(தமிழன் வெப்)

Post a Comment

0 Comments