பொதுபலசேனாவின் ஞானசார தேரர் மூன்று வருடங்கள் ஜப்பானில் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவுள்ளாராம்.அதற்கான வதிவிட விசா அவருக்கு கிடைத்துவிட்டதாக தகவல்.அதேசமயம் ஜப்பானில் அவர் சமயப் பணிகளிலும் ஈடுபடவுள்ளதாக தகவல்.
அவர் ஜப்பானுக்கு செல்ல ஏற்பாடுகள் நடந்தாலும் அவர் அப்படிச் செல்லாமல் இங்கிருந்து பணியாற்ற வேண்டுமென சிலர் தேரரிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று -07- அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 20017 ஆம் ஆண்டு வெலிகடை - ராஜகிரிய பிரதேசத்தில் போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு கடமையை செய்ய இடமளிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படும் சம்பம் தொடர்பாக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
ஞானசார தேரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் பகிரங்கமாக வாசிக்கப்பட்டது. எனினும் தான் நிரபராதி என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து ஞானசார தேரர், ஜப்பான் செல்ல அனுமதி வழங்குமாறு, அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதி வழங்கிய கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா, வழக்கை ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
0 Comments