புத்தளம் மண்டலகுடா பிரதேசத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் முகத்தை பாதியாக மூடி
ஆடை அணிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளம் கர்ப்பிணித் தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
2003 ம் ஆண்டு பிறந்த இளம் கர்பிணி தாய் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் புகைப்படம் எடுக்க சென்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 24 ம் திகதி கடைசியாக விசாரணக்கு எடுக்கப்பட்ட நிலையில் தொடந்து இரு வாரங்களுக்கு அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.
கடந்த மாதம் 16ம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டு 17 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த 24ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த கர்ப்பிணி தாயின் விடுதலைக்காக பெண்ணியல் செயற்பாட்டாளர்கள் ஷெரின் சரூர் , நதிஹா ஆகியோர் செயற்பட்டு வந்த அதேவேளை சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.
0 Comments