அனுராதபுரம் கெக்கிராவை திப்பட்டுவெவவில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் பலியாகி உள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து காரணமாக மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
தம்புள்ளையில் இருந்து கெக்கிராவை நோக்கி கெப் ரக வாகனம் ஒன்று மேலதிக வகுப்பபு செல்ல வீதிக்கு ஓரமாக நின்ற பாடசாலை மாணவர்களை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒரு மாணவர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
1 ) எரந்த இஷான் திலகரத்ன 14 வயது.
2) இமந்த பசிந்து ஹேரத் 15 வயது.
3) அச்சின்ன லக்சான் 16 வயது.
ஆகிய மாணவர்களே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் குறித்த லொரியுடன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பிரதேச மக்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக ஏ-9 வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
0 Comments