இதனை இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னை மீள் பரிசீளனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே பார்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைகளுக்குப் பின்னால் அரசியல், மார்க்கம், பொருளாதாரம், இனவாதம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் அல்லாஹ்வின் பெயரால் ஒரு சிறிய கூட்டமேனும் இவ்வளவு தூரம் மூளை சலவை செய்யப்பட்டிப்பதை பார்க்கையில் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.
தொட்டதுக்கெல்லாம் மார்க்கம் பேசுதல்,
எதற்கு எடுத்தாலும் மார்க்க
ஆதரங்களுடன் தர்க்கம் புரிதல்,
வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பின்னால் திரிதல்,
யாராவது ஒரு மெளலவியை ஓவராக பின்பற்றத் தொடங்குதல்,
இணையத்தில் தீவிரவாத இயக்கங்களின் வீடியோக்களைப் பார்த்தல் அவற்றை பகிர்தல்,
இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிள்ளைகள் உங்கள் வீடுகளிலோ,
ஊரிலோ இருந்தால் இப்போதே தட்டி வையுங்கள்.
இல்லாவிட்டால் நாளை உங்கள் வீட்டிலோ, ஊரிலோ இஸ்லாத்தின் பெயரால் குண்டுகள் தாயரிப்பார்கள்.
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
Safwan Basheer
0 Comments