Subscribe Us

header ads

300 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கற்பிட்டி பெரிய பள்ளியின் வரலாற்று சுருக்கம்.



பெரியபள்ளி என்று அழைக்கப்படும் முகைதீன் ஜும்மா பள்ளி எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது என்பதை உறுதியாகக்கூற முடியாது. பள்ளியின் பழைய கட்டிடத்தில் 1974-1975 வரை நடைபெற்ற திருத்தப் பணிகளின் போது பள்ளியின் வலது, இடபுற வெளிச்சுவர்கள் அகற்றப்பட்டு புதிய சுவர்கள் அமைக்கப்பட்டன பழைய சுவர்களில் ஜன்னல்களுக்கு மேல் இருந்த வளைவுகள் டச்சு கட்டிட கலை முறையில் அமைக்கப்படிருந்தன. இதன் படி இப்பள்ளி டச்சு ஆட்சி காலத்தின் பிற்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது.
1974-1975 நடைபெற்ற பள்ளித்திருத்த வேலைகளின் போது கூரையிலிருந்தத ஓடுகள் அகற்றப்பட்டு புதிய ஓடுகள் போடப்பட்டன, கதவுகள் புதிதாக அமைக்கப்பட்டன, பள்ளியின் முன் முகப்பு கட்டப்பட்டன.

இப்பள்ளியை முதலில் அமைத்தவர் அப்துல் அசீஸ் மரிக்கார் என்ற தனவந்தர் ஆவரர். இவருடைய மகன் இப்ராஹீம் நெய்னா மரிக்கார், அவருடைய மகன் முஹம்மது தம்பி மரிக்கார், அவருடைய மகன் தம்பி நெய்னா மரிக்கார் ஆவார். தம்பி நெய்னா மரிக்காரின் மகன் அப்துல் அசீஸ் மரிக்கார் ( ஹபீப் மரிக்கார் தற்போது வாழ்த்து வருகிறார்)

அப்துல் அசீஸ் மரிக்கார்
இப்ராஹீம் நெய்னா மரிக்கார்
முஹம்மது தம்பி மரிக்கார்
தம்பி நெய்னா மரிக்கார்
அப்துல் அசீஸ் மரிக்கார் ( ஹபீப் மரிக்கார்)

1956ல் திரு S.W.R.D பண்டாரநாயக்க பிரதமரின் ஆட்சிகாலத்தில் வக்பு சபைச் சட்டம் கொண்டு வரப்பட்டு நாட்டிலிருந்த அணைத்துப் பள்ளிவாயல்களும் வக்பு சபை ஆணையாளரின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டதுடன் பள்ளிகளைப் பராமரிக்க ஜமா-அத்தார்களினால் தெரிவு செய்யப்பட பரிபாலன சபை முறையும் ஏற்படுத்தப்பட்டது.  

1972ல் தான் கற்பிட்டி பெரியபள்ளி வக்பு சபையின் கீழ் பதியப்பட்டு வக்பு ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டது. இப்பள்ளி அமைக்கப்பட்ட காலத்திலிருந்து 1972 வரை பள்ளி நிர்வாகம் மரிக்கார்மாரின்பொறுப்பில் இருந்தது.

1972 காலப்பகுதியில் இப்பள்ளியின் மரிக்கார்மார்களாக M.N.M தம்பி நெய்னா மரிக்கரும், S.M உதுமான் லெப்பை மரிக்கரும் நிர்வாகம் செய்து வந்தனர். S.M உதுமான் லெப்பை மரிக்கர் அவர்கள் தற்போது வாழ்ந்து வரும் U.L.M உபைத் மரிகாரின் தந்தையாவர்.

இவ்விரு மரிக்கார்மார்களும், இவர்களின் முன்னோர்களும் பெரிய தனவந்தர்களாவும்,பெரிய கொடை வள்ளல்கலாவும் இருந்துள்ளனர். சிறுபள்ளிகள், தர்ஹாக்கள் அமைத்துள்ளனர். ஊர்மக்களின் தலைவர்களவும் இருந்து நீதி நியாயங்களை வழங்குயுள்ளனர். வரிய மக்களுக்கு பல வகையான உதவுகளையும் செய்துள்ளனர். முகைதீன் ஜும்மா பள்ளி (கற்பிட்டி பெரிய பள்ளி) அமைக்க காணி வழங்கியமை, பள்ளிக்கட்டிடம் அமைத்தமை, பள்ளி பராமரிப்புக்கு தென்னங்காணி வழங்கியமை என்பவற்றை குறிப்பிடலாம்.
ஊர் மக்கள் அனைவரையும் பள்ளிக்கு அழைத்து உணவு அளித்துள்ளனர். “அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக” ஆமீன்!

1972ல் முதலாவது ஏற்படுத்தப்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம்
01                  O.H ஹமீட் நெய்னா மரிக்கார் – தலைவர்
02                  S.M.S ஆப்தீன் ஆசிரியர் – செயலாளர்
03                  S.M முஹம்மது காஷிம் மரிக்கார் (ஹாஜியார் அப்பா) – பொருளாளர்
04                  O.H ஆப்தீன் (கல்விப்பணிப்பாளர்) – உப தலைவர்
05                  M.N.M இஸ்ஸதீன் மரிக்கார் ஆசிரியர் – உப செயலாளர்
06                  P.M அலிபுதீன் மரிக்கார்
07                  M. அபுசாலி லெப்பை
08                  M.C.M.M நெய்னா மரிக்கார்
09                  S.M புஹாரி
10                  U.L..M உமர் இபுனு ஆசிரியர்
தலைவாராக இருந்த O.H ஹமீட் நெய்னா மரிக்கார் அவர்கள் சுகயீனம் காரணமாக பதவி விலக O.H ஆப்தீன் (கல்விப்பணிப்பாளர்) தலைவர் பதவியை ஏற்றார். இவருக்குபினர் நீண்டகாலமாக S.I.M.M நெய்னா மரிக்கார் ஆசிரியர் தலைவராக இருந்தார். அதன் பின்னர் M.L.M சேகு முகைதீன் தலைவர் பதவியை ஏற்றார். இவருக்கு பின் M.I.M  சஜாஹான் தலைவர் பதவியை ஏற்று 7 வருட காலமாக தலைவராக சேவையாற்றி வருகிறார்.

தலைவர்காளாகப் பணியாற்றிய O.H ஹமீட் நெய்னா மரிக்கார், O.H ஆப்தீன் S.I.M.M நெய்னா மரிக்கார் M.L.M சேகு முகைதீன் M.I.M  சஜாஹான் ஆகியோரும் அவருடன் சேர்த்து பணியாற்றிய செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் இப்பளியின் வளர்ச்சிக்கு அரும் பெரும் சேவைகள் செய்துள்ளனர். “அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக” ஆமீன்!

சுமார் 300 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட இப்பள்ளியின் பிரதானவாயில் நிலைப்படி இன்றும் உள்ளது. அதே போல் அந்த வாசலில் மேல் சுவரில் உள்ள முதலாம் கலிமாவை இன்றும் காணலாம். கட்டிடத்தை தாங்கி நிற்கும் முதிரை மரத்தூண்களின் வயதும் 300 ஆகும். முழு மரத்திலான அந்தத் தூண்கள் இந்தியாவிலிருந்து கொண்டு
வரப்பட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.

தகவல்: S.M.S ஆப்தீன் ஆசிரியர் 
RIZVI HUSSAIN 



Post a Comment

0 Comments