NFGG இன் புத்தளம் நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் M. T. நூருல் அமீன் அவர்கள் தனது கட்சியின் அடுத்த உறுப்பினர்க்கு இடம் விட்டு தனது பதவியை இம்மாதத்துடன் இராஜினாமா செய்கின்றார்.
இதற்கமைய, ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, ஜனாப் இஸ்மாயில் ரியாஸ் அவர்கள் அந்த இடத்தை நிரப்புதல் வேண்டும். இருந்தும், NFGG பெண்களுக்கு வழங்கும் வகிப்பாகமாக, ஜனாபா A. K. சித்தி சலீமா அவர்கள் அவ்விடத்தை நிரப்ப வேண்டும் என்ற பிரேரணையை ஜனாப் இஸ்மாயில் ரியாஸ் அவர்கள் முன்வைத்தார். இது, ஜனாபா A. K. சித்தி சலீமா அவர்களின் சமூக சேவையின் பெறுமதி உணரப்பட்டு, வழங்கப்பட்ட பதவியாகும்.
இப்பிரேரணையை ஏற்றுக்கொண்ட நிர்வாகக்குக்குழு, அடுத்த இரண்டாவது ஆண்டின் முதல் 6 மாத காலத்தை ஜனாபா A. K. சித்தி சலீமா அவர்களும் மீதி 6 மாத காலத்தை ஜனாப் இஸ்மாயில் ரியாஸ் அவர்களும் பதவி வகிப்பது என்று தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
நகர சபை NFGG உறுப்பினர் பதவியின் மூன்றாம், நான்காம் ஆண்டுகள் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய PPAF குழுவினரிடம் ஒப்படைக்கப்படும்.
0 Comments