தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக மூடப்பட்டதா புத்தளம் தள வைத்தியசாலையின் I.C.U. பிரிவு..? புத்தளத்து அரசியல்வாதிகளை தலையிடுமாறு மக்கள் அவசர கோரிக்கை ..!!
(Puttalam today)
புத்தளம் தள வைத்தியசாலையின் ICU பிரிவானது, தள வைத்தியசாலையில் நிகழும் தனிப்பட்ட பிரச்சனைக் காரணமாக இழுத்து மூடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் மிகத் திறமையாக செயல்பட்டு, நோயாளர்களுக்கு இன்றியமையாததாக செயல்பட்டு வந்த புத்தளம் தள வைத்தியசாலையின் I.C.U. பிவிற்கே இந்தக் கதி ஏற்பட்டுள்ளது.
முன்பு இங்கிருந்த மயக்க மறுத்து நிபுணர் வெறும் ஆறு வைத்தியர்களுடன் சிறப்பாக இந்த பிரிவை இயக்கி வந்த போதிலும் கூட இன்று 10 வைத்தியர்கள் இருந்தும் சரியான காரணங்கள் இன்றி இந்த அவசர சேவைப் பிரிவு மூடப்பட்டமையானது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இந்த மூடுதலின் பின்னணியில் வைத்தியசாகையில் நிலவும் நிபுணர்களுக்கு இடையேயான கௌரவப் பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக இந்தப் பிரிவு அடாத்தாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தற்போது இருக்கும் தள வைத்தியசாலையின் MS, மாகாண சுகாதாரப்பணிப்பாளர்கள் உற்பட தகுதிவாய்ந்த அதிகாரிகள் இவற்றின் பாரதூரம் அறியாமல், இதனை தடுப்பதற்கு எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் வெறுமனே கைக்கு கட்டி வேடிக்கைப் பார்த்ததுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ICU மூடப்பட்டவுடன் அவசர கதியில் அங்கிருந்த அதி நவீன உயிர்காக்கும் உபகரணங்களும் அகற்றப்பட்டதாகவும், அங்கிருந்த அதி நவீன கட்டிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம், ஆணைமடு உற்பட மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளின் நோயாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ICU மூடலின் பின்னணியில் ஒரு வைத்திய நிபுணனரே பிரதான வகிபாகத்தைக் கொண்டிருப்பதாகபுத்தளம் டுடேக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரிவில் சிறப்பாக கடமைப் புரிந்த வைத்தியர்களும் அங்கிருந்து காரணங்கள் இன்றி வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டே இந்த அக்கிரமம் இடம் பெற்றுள்ளமை பற்றியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டதை அடுத்து இனிமேல் நோயாளர்கள் அனுராதபுரம், குருநாகல், கண்டி, கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர் ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கவலைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திற்கு நடக்கும் அனைத்து அநியாயங்களையும் வேடிக்கைப் பார்த்ததுக் கொண்டிருந்து விட்டு போலியான அபிவிருத்திகளையும் போலியான, உப்புப் பெறாத உரிமைகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்துது விட்டு மக்களை ஏமாற்றும் நம்மூர் அரசியவாதிகள் இதில் உடனடியாக தலையீடு செய்து ICU மீண்டும் தொழிற்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என புத்தளம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Source - Puttalam Today
0 Comments