2019ம் ஆண்டுக்கான கல்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேள புதிய நிர்வாக தெரிவு இன்று காலை 11.00 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
சர்வமத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முதலாவதாக முன்னாள் தலைவர் A.M அஸ்பாக் அவர்களால் தேசிய இளைஞர் உறுதிமொழி வாசிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து சென்ற வருட அறிக்கை இளைஞர் சேவைகள் அதிகாரியும் கல்பிட்டி பிரதேச இளைஞர் மன்ற செயலாளருமான M.R.M. தஸ்மிம் அவர்களால் வாசிக்கப்பட்டது.
இதன் போது கல்பிட்டி பிரதேச செயலாளர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு தேசிய இளைஞர் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பாக அதனூடாக இளைஞர்கள் பெரும் பயன்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
அதனை தொடர்ந்து புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
தலைவர்- A.M. நிம்னாஸ்
(அல்-அஸ்ஹர் இளைஞர் கழகம்)
உப செயலாளர்- W.K. சஜினி சமிலா
(சாந்தி ஷ்டிவன் இளைஞர் கழகம்)
பொருளாலர்- A.R.M. ஹஸ்லான்
(கிஸ் ஸ்டார் இளைஞர் கழகம்)
அமைப்பாளர்- A.N.விஸ்வா
(முத்தமில் இளைஞர் கழகம்)
உப தலைவர்- M.S.M. சஜான்
(Brilliant இளைஞர் கழகம்)
விளையாட்டு செயலாளர்- M.A.M. இஜாஸ்
(முத்தமில் இளைஞர் கழகம்)
ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு- M.R.M.இர்பான்
(Brilliant இளைஞர் கழகம்)
புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அங்கத்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெறிவிப்பதோடு எதிர்வரும் நாட்களில் தேசிய இளைஞர் மன்றத்தினால் முன்னெடுத்து செய்யப்படும் அனைத்து செயற்பாடுகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் எமக்கு அருள்புருவானாக,
Irfân Rizwân
(Member of Youth council/Media)
0 Comments