Subscribe Us

header ads

இலங்கையின் பட்ஜெட் 2019 முழு விபரம் இதோ..


கடவுச்சீட்டு விநியோகத்திற்கான கட்டணம் ஒரு நாள் சேவை 5000 ரூபாவாலும் சாதரண சேவை 3500 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்

கெசினோவுக்கான அனுமதிக் கட்டணம் 50 டொலர்

2019 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 100 ரூபாவால் சில அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபான உற்பத்திக்களுக்கான விலையில் திருத்தம்

சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு

இழப்பீட்டு அலுவலகம் குறித்த விழப்புணர்வுத்திட்டங்களுக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு ;காணாமல்போனோர் குடும்பத்திற்கு மாதம் 6 ஆயிரம் வழங்க யோசனை

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவை விருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு

மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


சிறு கைத்தொழில்கள்ள வடக்கில் விருத்தி செய்தல் ; 2000 மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு நீர், மின்சார வசதிகளை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு பனை நிதியம் ( palmyra fund ) புலம்பெயர் தமிழர்களை குறித்த நிதியத்திற்கு ஆதரவு வழங்க கோரிக்கை

பொருளாதார கொள்கையில் குறுங்காலத்தை கவனத்திற்கொள்ளல் : அதனால் மக்கள் வாழ்வில் மாற்றமில்லை ; அதனை மாற்றியமைக்கும் வகையில் வரவு - செலவுத்திட்டம் அமையும்

பனை அபிவிருத்திக்கு 5 பில்லியன் ஒதுக்கீடு. அந்நிதி போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

பொதுமக்களை வலுப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க சமுர்த்தி தவறிவிட்டது. அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அரசியல் கூட்டாளிகளின் துணையுடன் பயனாளிகள் தீர்மானிக்கப்படுகிறார்கள்.

எனவே, இத்திட்டம் மறுசீரமைக்கப்படும். 600,000 புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கென 10,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


நல்லிணக்கத்தின் ஊடாக பொருளாதார செயலாக்கம் : வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படல், அவர்களை வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ளதக்க நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல், இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கான சட்டமூலம் நிறைவேற்றம்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் விகாரைகள் புனரமைப்பு ; வணக்கஸ்தலங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

கலைஞர்களுக்கு காப்புரிமைக் கட்டணம் முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை ; இதனூடாக அவர்களுக்கு பெரும் இலாபம் பெறமுடியும்

கம்பெரெலிய உள்ளிட்டவற்றுக்கு மேலதிகமான திட்டங்களுக்கு விசேட நிதி
பொழுது போக்கு சேவை அதிகரிப்பு

1000 கிராமங்கள் உள்ளடங்கும் "பிரஜா ஜல அபிமானி" வேலைத்திட்டம் ஆரம்பம்

அனர்த்தங்களுக்கு உள்ளான வீடுகள் புனரமைப்பு, உட்கட்டமைப்பு என்பவற்றிற்கு நிதி ஒதுக்கீடு

போகம்பரை சிறைச்சாலை அபிவிருத்திக்கு 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு


முதியோர் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையிலான திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

ஓய்வூதியம் பெறுவோரின் முரண்பாடுகளை சரி செய்ய 12 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

மாலபேவிலிருந்து கொழும்பு வரையான ரயில் வழிப்பாதைக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 10000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை போக்குவரத்து சேவைக்கு 250 பஸ்களை வழங்க 1.5 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

விசேட பாதுகாப்பு பிரிவுகளின் மேலதிக கொடுப்பனவு 1000 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிப்பு

ஜூலை முதலாம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிப்பு


பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 1000 சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை. அதனை மேம்படுத்த 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு கடன் சலுகை

கிராம வீதி அபிவிருத்திக்கு 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு

கட்டணம் செலுத்தி பெறப்பட்ட அட்டை மற்றும் ஜி.எஸ்.பி. முறையை அடிப்படையாகக்கொண்ட பேரூந்து சேவை முறை உருவாக்கப்படும்

நாடளாவிய ரீதியிலான குடிநீர் அபிருத்தித்திட்டங்களுக்கு 45000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

2020 முதல் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்து விதத்தில் உருவாக்கப்படும் கட்டடங்களுக்கு மாத்திரம் அனுமதி

நகர ஈர நிலங்கள் திட்ட உருவாக்கத்திற்கு 10900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

கொழும்பு நகரத்தை புத்துயிர் அளிக்கும் திட்டத்திற்கு 300 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

ஒக்ஸ்போர்ட் உட்பட சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த வருடம் முதல் 28 மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்

விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு

புதிய வீட்டு திட்டத்திற்கு 8 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

தனியார் பிரிவு ஊடாக தாதியர்களுக்கு பயிற்சி நிவாரண உதவி.

தமிழ் மொழியில் ஆசிரிய பயிற்சியை முன்னெடுப்பதற்காக 400 மில்லியன் ரூபா வழங்கப்படும்

பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ. 32,000 மில்லியன்

உயர்கல்வியை தொடர்வதற்கான பொருளாதார வசதியற்ற மாணவர்களிற்காக - எனது எதிர்காலம் கடன் திட்டம்

உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களுடன் இணையாது வெளிநாட்டு கட்டுமான நிறுவனங்களால் உள்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.

நிதி அமைச்சில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்படவுள்ளது.

உட்கட்டமைப்புடன் தொடர்புடைய பகுதிகளுக்கு விசேட தகுதி நிர்ணயம் ( tap, shower போன்றவை)

கூட்டு முயற்சி உருவாக்கத்திற்கு முன்னுரிமை - இது உள்நாட்டு கம்பனிகளின் வளர்ச்சிக்கு உதவும்

தேசிய பூங்காக்களுக்கான அனுமதிச்சீட்டு பணம் 15 சதவீத்ததால் குறைப்பு - வெளிநாட்டு மாணவ சுற்றுலாப்பயணிகளுக்கு மாத்திரம்

நவீன தொழில்நுட்ப வசதிகள் - குறிப்பாக இணையவழி ஹோட்டல் முன்பதிவு உள்ளிட்டவற்றை விரிவாக்கல் - அதனூடாக சுற்றுலாத்துறையை விரிவாக்கல்

இயந்திரங்களுக்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் வரி விதிப்பு 2.5% குறைக்கப்படும்.

தேசிய ஏற்றுமதிக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நோக்கத்திற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

புதிய கைத்தொழில் வலையங்கள் உருவாக்கப்படும்

பொருத்தமான உட்கட்டமைப்புக்களில் முதலீடு செய்வதில் மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படல்

என்டர்பிரைஸ் புத்தாக்கத் திட்டம் - 3 வருடத்திற்குள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

நிர்மாணம், சுற்றுலா, உற்பத்தி துறைகளில் விசேட கவனம்

வாழ்க்கைச்செலவுகளை சமாளிக்கத்தகுந்த ஆலோசனைகள்

"கனவு இல்லம் கடன்வசதி" - வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கு உள்ள கனவு சொந்த வீடு - அதற்கான புதிய கடன் திட்டம்

“home sweet home” என்ற திட்டத்திற்கு 6 வீத வட்டி - 25 வருடங்களில் கடனை செலுத்த வேண்டும் - 10 மில்லியனுக்கும் அதிக கடன் வழங்கப்படும்

வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வளங்களை பயன்படுத்த திட்டம்

பல்கலைக்கழக மாணவர்களின் 50% க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், பெண் தொழிலாளர்கள் 30% க்கும் குறைவாகவே உள்ளனர்.


வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3 மாதங்களுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்

விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அது 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அதற்காக 4,320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு“ home sweet home” என்ற வீடமைப்புத்திட்ட கடன்

வடக்கு, கிழக்கில் 15, 000 வீடுகள் நிர்மாணிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேலும் அதிகரிப்பு

சிறைச்சாலையில் உள்ள பெண்கள் சிறிய குற்றமிழைத்தோர், இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கும் நோக்கில் நிதி ஒதுக்கீடு

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு வீரவில பிரதேசத்தில் நல்வழிப்படுத்தும் வகையில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது

சிறைச்சாலைகளில் உள்ள பெரும்பாலானோர் போதைப்பொருளுடன் தொடர்புடையோர் ; அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை.

விசேட தேவையுடையோரில் குறைந்தது 5 பேரை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தினால் விசேட வரிச்சலுகை

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் மகப்பேற்று காலத்தில் 3 மாத கால விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

பாடசாலையின் பின்னரான விடுமுறை தினங்களில் சிறுவர்களை பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்


பொது பேரூந்து நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கழிவறை நிர்மாணம் ; அதனை தனியார் துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளோம்.

இவ்வருடம் நாட்டில் கழிவறை இல்லாத நிலையை உருவாக்குவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

இலங்கை நடுநிலை வருமானம் பெறும் நாடு ; ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு முறையான கழிவறை வசதி கூட இல்லாமல் இருக்கின்றனர் ; மொனராகலை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு முறையான கழிவறை வசதி கூட இல்லை

அரச பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் போசனைமட்ட அதிகரிப்பிற்கு ஒரு குவளை பால் வழங்கல்

அதிவேக வீதி அபிவிருத்திக்கு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ; அதிவேக வீதி மற்றும் போக்குவரத்து தொடர்பாக வாசிக்கப்பட்டமைக்கு எதிர் தரப்பு கூச்சல்

மண்டைதீவு - பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு

21 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இந்த வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டால் நன்மை

தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் பேச்சுவார்த்தை ; அதற்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கும் ஆலோசனை.

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு - தேயிலை சபையுடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்

மொரகஹா கந்த திட்டத்திற்கு 12000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

இலங்கை கறுவா ஏற்றுமதியின் போது தகுதிச்சான்றிதழ் பெறல் கட்டாயம்.

இலங்கை கறுவாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை உறுதி செய்ய விசேட நிதி ஒதுக்கீடு

தென்னை பொருளுற்பத்தியாளர் அனுமதிப்பத்திரம் வழங்கலில் மீள்பரிசீலனைகளை ஏற்படுத்தல்

டயர் உற்பத்தியாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பரிசோதனை வசதிகளை விரிவாக்கல்

நெல் , இறப்பர் உற்பத்திற்கு 800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணை வியாபாரிகளுக்கு திரிசவிய கடன் திட்டத்தை விரிவாக்கல்
விவசாயத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்வதற்கு, விசேட களஞ்சியப்படுத்தல் இடங்களுக்கு நிதி ஒதுக்கீடு.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் உதவித் திட்டம் தொடர்பில் 1925 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்

“மக்களையும் ஏழைகளையும் வலுப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகும். அது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறும். 

வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற குழுநிலை விவாதங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வரை இடம்பெறும். 

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் மொத்த செலவினம் இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 200 கோடி ரூபாவாகும். 

இந்த வரவு செலவுத்திட்டம் தொடர்பான செலவின மதிப்பீட்டு பிரேரணை கடந்த மாதம் ஐந்தாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளது.

கடந்த காலங்களில் நல்லாட்சி ஆட்சியின் போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு- செலவுத்திட்டத்தை போலல்லாது இது வெறுமனே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம் என்பது விசேட அம்சமாகும்.


2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்­கீ­டாக 445000 கோடி ரூபா ஒதுக்­க­ப்பட்­டுள்­ள­துடன் இதில் 216000 கோடி ரூபாவை கட­னாக பெறவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­டத்தை கடந்த ஆண்டு சமர்ப்­பிக்க முடி­யாத நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்­கால வரவு செலவு திட்டம் ஒன்­றினை அர­சாங்கம் முன்­வைத்­தது. 

இவ் இடைக்­கால கணக்­க­றிக்­கையில் இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்­க­ளுக்­காக 1765 பில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் சேவை­க­ளுக்­காக 790 பில்­லியன் ரூபாவும், திரட்டு நிதி­யத்­துக்­காக 970 பில்­லியன் ரூபாவும், முற்­ப­ணங்­க­ளுக்­காக 5 பில்­லியன் ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன.


இத­னைத்­தொ­டர்ந்து 2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்ட நிதி ஒதுக்­கீட்டு பிரே­ரணை கடந்த பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி சபை முதல்வர் லக்ஸ்மன் கிரி­யெல்­ல­வினால் முன்­வைக்­கப்­பட்­டது. 

இப் பிரே­ர­ணையில் இம்­முறை வர­வு­செ­லவுத் திட்­டத்தில் 445000 கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

கடன் பெறக்­கூ­டிய தொகை 216000 கோடி ரூபா­வாகும். அத்­துடன் இக்­குறை நிரப்­பியில் ஜனா­தி­ப­திக்கு 1355 கோடியே 7180000 ரூபாவும், நிதி மற்றும் வெகு­சன ஊடக அமைச்­சுக்கு 18384 கோடியே 5358000 ரூபாவும், பாது­காப்பு அமைச்­சுக்கு 39306 கோடியே 9030000 ரூபாவும், பிர­த­மரின் அமைச்­சான தேசிய கொள்­கைகள்,பொரு­ளா­தார அலு­வல்கள் ,மீள் குடி­யேற்றம்,புனர்­வாழ்­வ­ளிப்பு,வட­மா­காண அபி­வி­ருத்தி,வாழ்க்கை தொழிற்­ப­யிற்சி,திறன் அபி­வி­ருத்தி,மற்றும் இளைஞர் அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 9830கோடியே 9652000ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சுகா­தார அமைச்­சுக்கு 18748 கோடியே 2398000 ரூபாவும் வீட­மைப்பு ,நிர்­மா­ணத்­துறை,மற்றும் கலா­சார அமைச்­சுக்கு 1663 கோடியே 1300000 ரூபாவும் கல்வி அமைச்­சுக்கு 10500கோடி has ரூபாவும் மலை நாட்டு புதிய கிரா­மங்கள்,உட்­கட்­ட­மைப்பு வச­திகள்,மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 388 கோடியே 3000000ரூபாவும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சுக்கு 856 கோடியே 2000000ரூபாவும் கைத்­தொழில் வாணிப ,நீண்­ட­கால இடம்­பெ­யர்ந்தோர் மீள்­கு­டி­யேற்றம்,மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 289கோடியே 4900000ரூபாவும் உள்­ளக,உள்­நாட்டு அலு­வல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராச்சி அமைச்­சுக்கு 29239 கோடியே 6005000ரூபாவும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.மிகுதி ஏனைய அமைச்­சுக்­க­ளுக்கும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

0 Comments