Kids Soccer Academy ,Young Horses Soccer Club தனது இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு யாரும் எதிர்பார்க்காத வரலாற்று நிகழ்வு ஒன்றை கடந்த (27-01-2019) கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடாத்தி கல்பிட்டி மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள்,
மறந்து போன கல்பிட்டி விளையாட்டு துறையில் சாதனை படைத்த அன்றைய சாதனையாளர்களுக்கு நாளைய எமது சாதனையாளர்களாக மிளிரவிருக்கு சிறார்களை ஊக்கும் முகமாக வழங்கப்பட்ட கெளரவ விருது வழங்கும் நிகழ்வு,
இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் கலந்து கொண்டதோடு பிரதம அதிதியாக முன்னால் கல்வி திணைக்கள உதவி பணிப்பாளர் S.TM.பைருஸ் சமான் ஆசிரியர் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கல்பிட்டி மண்ணின் முன்னால் விளையாட்டு துறை சாதனையாளர்களும் ,கிராம சேவகர் ரியாஸ்,கல்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவர் P.M.M,பாஹிம்,கழக அங்கத்தவர்களும் இவ்வரலாற்று நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
-Rizvi Hussain-







0 Comments