Kids Soccer Academy ,Young Horses Soccer Club பெருமையுடன் வழங்கிய இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு கடந்த (27-01-2019) கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் நடாத்திய வரலாற்று நிகழ்வில் 1960-1980 காலப்பகுதியில் பல (விளையாட்டு) துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு அவர்களுடைய அன்றைய சாதனையை மீண்டும் ஞாபகப்படுத்தி கெளரவபடுத்தி விருது வழங்கப்பட்டது ஒரு மெய்சிலிர்க்கும் நிகழ்வாகவே காணப்பட்டது ,இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டு குழுவுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் இவ்வாறான இன்னும் பல நிகழ்வுகள் நடைபெற பிரார்த்திப்போம்.
குறிப்பு: இவ்விழாவிற்கு கெளரவப்படுத்தப்படவிருந்த ஒன்பது சாதனையாளர்கள் சுகயீனம் வேறு பல தவிர்க்க முடியாத காரணங்களால் சமூகம் தர முடியாமல் போனதால் அவர்களுடைய கெளரவ நினைவு சின்னம் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வழங்கவுள்ளதாக ஏற்பாட்டு குழவினர் தெரிவிக்கின்றனர்.
-Rizvi Hussain-









0 Comments