Subscribe Us

header ads

தேத்தாவாடி கண்டக்குழிகுடா வீதி அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடினார் J.M.தாரிக்.

கல்பிட்டியில் அதிகமாக சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் பயன்படுத்தும் வீதியான தேத்தாவாடி வழியாக செல்லும் கண்டக்குழி குடா வீதி மழைக்காலங்ஙளின் மிகவும் மோசமாகவும் மக்கள் பயணிக்கவும் முடியாமலும் காணப்படுவதினால் இவ்வீதி அவசியம் அமைக்கப்படவேண்டிய வீதிகளின் ஒன்றாக காணப்படுவதினால் இவ்வீதியை காபட் வீதியாக அமைத்து தருமாறு அண்மையில் சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களை சந்தித்து கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக் அவர்கள் மகஜர் ஒன்றை கையளித்தார்.

இம்மகஜரில் உடனடியாக கையொப்பமிட்டதோடு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தான் இவ்வீதியை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கெளரவ அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேபோல சுற்றுலா துறை சம்மந்தமாக காணப்படும் சில பிரச்சினைகள் சம்பந்தமாகவும் அமைச்சருடன் கலந்துரையாடியதாக J.M.தாரிக் அவர்கள் தெரிவித்தார்.

-Rizvi Hussain-


Post a Comment

0 Comments