Subscribe Us

header ads

ஷார்ஜாவில் பஸ் கட்டணம் 3 திர்ஹம் வரை உயர்வு!



ஷார்ஜாவில் பொது போக்குவரத்து பஸ் கட்டணம் 3 திர்ஹம் வரை உயர்ந்தது

ஷார்ஜாவின் பொது போக்குவரத்து கழக (Sharjah RTA) பஸ்களின் பயணக்கட்டணம் 1 திர்ஹம் முதல் 3 திர்ஹம் வரை பயணம் செய்யும் தடங்களுக்கு ஏற்ப ஏற்றப்பட்டது, குறிப்பாக இன்டர்சிட்டி (Inter city) பஸ்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

1. ஷார்ஜா – அல் அய்ன் அல்லது அபுதாபி செல்ல – 30லிருந்து 33 ஆகவும்
2. ஷார்ஜா – துபை அல்லது புஜைரா செல்ல – 30லிருந்து 32 ஆகவும்
3. ஷார்ஜா – உம்மல் குவைன் செல்ல – 15லிருந்து 17 ஆகவும்
4. ஷார்ஜா – ராஸ் அல் கைமா செல்ல – 25லிருந்து 25 ஆகவும்
5. ஷார்ஜா – அஜ்மான் செல்ல – 5லிருந்து 6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும் ஷார்ஜா நகரப் ( Intra-city Sharjah routes)  பேருந்துகளில் 7லிருந்து 8 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாயர் பயண அட்டை உடையவர்களுக்கு மட்டும் 5.50 திர்ஹத்திலிருந்து 6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஷார்ஜா டேக்ஸிக்களில் குறைந்தபட்ச கட்டணமான 11.50 திர்ஹத்திற்குப் பதிலாக 13.50 திர்ஹம் என ஏற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments