அஸ்ஸலாமு அலைக்கும்.
வணக்கம்.
நன்றி நன்றி நன்றி
இறைவனுடைய நாட்டத்தினாலும்,உங்களுடைய ஆதரவினாலும் என்னை மாகாண சபைக்கு தெரிவு செய்து அனுப்பிய புத்தளம் மாவட்ட அனைத்து மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
2018:10:10 இன்றுடன் 6வது மாகாணசபை கலைக்கப்படுகிறது இத்துடன் எனது பதவி நிறைவு பெறுகிறது.
இறைவன் உதவியுடன் உங்கள் வாக்குகளினாள்
எனக்கு கிடைக்கப்பெற்ற கடந்த 5ந்து வருட பதவியில் இறைவனுக்கு பயந்து எனக்கு வாக்களித்த வாக்களிக்காத மக்கள் என்று வேறுபாடு பார்க்காமல் என்னால் முடிந்த என் தகுதிக்கு மீறிய சேவைகளையும்,
மக்களுக்காக குரல் கொடுப்பதிலும் 100%உண்மையாக இருந்தேன்.
இருப்பினும் சில விடையங்கள் தாமதமாகி இருக்கலாம் ஒர் இரு விடயங்கள் நான் முயற்சித்தும் பலனின்றி இருந்திருக்கலாம். ஆனால் ஒருபோதும் நான் என் மக்கள் கோறிக்கைகளை தூக்கி எறிந்து பொடு போக்குதனமாக காலத்தை கழித்தது கிடையாது.
2013 ஆண்டு என்னை
மாகாணசபைக்கு வாக்களித்து அனுப்பிய அனைத்து மக்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்ற என்னதுடனே எனது அரசியல் பயணத்தை தொடர்ந்தேன். அன்று முதல் இன்று வரை எனது சமூகத்திற்கான தேவைகளை சேவைகளாக எண்ணி என்னால் முடிந்த என் தகுதிக்கு மீறிய அளவு செய்துள்ளேன்.
ஒவ்வெரு நாளும் விடியும் போது எனது மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்ற சிந்தனையுடன் விழித்தெழுபவன் நான்.
எனவே என்னை மாகாண சபைக்கு அனுப்பிய மக்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறியவனாக என்றும் உங்களில் ஒருவனாக நான்.
S.H.M.NIYAS (MPC)
0 Comments