Subscribe Us

header ads

கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையின் சாதனை வீரர் ரிகாஸ்

சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் தேசிய மட்ட போட்டிகளில்  நடைபெற்ற (02-10-2018) நீளம் பாய்தல் போட்டியில் பங்கு பற்றிய எமது கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் S.M.ரிகாஸ் தேசிய மட்டத்தில் திறமையான மாணவர்களுடன் நீளம் பாய்தல் போட்டியில் போட்டியிட்டு 6.45 மீட்டர் தூரம் பாய்ந்து ஐந்தாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இது தேசிய மட்ட போட்டிகளில் ஒரு சாதனையே இச்சாதனையை பெற்று தந்த மாணவர் S.M.ரிகாஸ் அவர்களே பாராட்டுவதோடு கடந்த 04 ஆம் திகதி பங்கு பற்றி மேலும் ஒரு போட்டியான முப்பாய்ச்சல் போட்டியிலும் இதை விட திறமையாக செயல்பட்டார்.

இப்போட்டி நிகழ்ச்சியை பார்வையிட நேரில் சென்று உற்சாகமளித்து வாழ்த்து தெரிவித்த எமது ஊரின் மெய்வல்லுன வீரர் ரகுமான் அவர்களுக்கு எமது பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறோம்.

-Rizvi Hussain-





Post a Comment

0 Comments