புஜைரா சிறைவாசிகள் இனி வீடியோ சாட்டிங் மூலம் இனி குடும்பத்தாருடன் பேசலாம்.
புஜைரா சிறைகளில் அடைபட்டுள்ளவர்கள் இனி தங்கள் குடும்பத்தினருடன் சிறையில் இருந்தவாறே ஐ பேட் வழியாக வீடியோ சாட்டிங் மூலம் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறைவாசிகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இடையிலான பிணைப்பு பாதிக்காது தொடர்வதுடன் அதிக தூரத்தில் உள்ளவர்கள் சிறைவாசிகளை காண்பதற்காக மிகுந்த சிரமமெடுத்து பார்க்க வருவதும் குறையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நவீன முறைக்கு ஏற்ப சிறைத்துறையும் தன்னை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் புஜைரா எமிரேட்டின் பிரிகேடியர் அல் ஜூவைதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments